மலர் ஒன்று பூத்திருக்கிறது

மலர் ஒன்று பூத்திருக்கிறது

மணிக்கூண்டு ஏற்றி
எச்சரிக்கை விட்ட பின்னால்
மாலையில் ஆரம்பித்த
புயல்

வீசிய காற்றும் மழையும்
யுத்தம் ஒன்றை ஆரம்பித்தன
அந்த வனத்தின் மீது

எதிர்த்தும் வளைந்தும், மண்ணை
தொட்டு நிமிர்ந்தும்
போராடியது அங்குள்ள
மரங்களும் செடிகளும்
இதனை எதிர்த்து

கடைசியில் ஒவ்வொன்றாய்
தோற்று வேரோடு மண்ணில்
சாயந்தன வீர மரணத்துடன்

புயல் ஓய்ந்தும் வானம்
விடிந்தும்
வனத்தை பார்க்க..!


அனைத்து மரம் செடி
கொடிகளும் மண்ணில் விழுந்து
மரணிக்கும் தருவாயில்
கிடந்தது

அப்பொழுதும் கீழே
விழுந்து மண்ணில் கிடந்த
செடி ஒன்று

விரிந்த மலர் ஒன்றை
தன் நுனி காம்பில்
தாங்கி பிடித்து
நிற்கிறது

எழுந்து விடுவேன்
என்னும் நம்பிக்கையில்…!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Sep-25, 10:02 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 66

மேலே