முகமூடி கிழிந்து விட்டது

முகமூடி கிழிந்து விட்டது...
15 / 09 / 2025

முகமூடி கிழிந்து விட்டது
மனிதர்களின் நிஜ முகம்
குரூரமாய் வெளிவந்தது
தேன் தடிவியை உதட்டின் வார்த்தைகள் - கருந்
தேளாய் தினமும் கொட்டித் தீர்க்கிறது.
அடங்கி கிடக்கும் செந்நாவும்
அடங்காமல் சீறி அலைக்கழிக்கிறது.
கேட்கும் செவியின் செய்திகள்
உருமாறி போய் சேர்க்கிறது.
கலங்கிய கண்களின் பார்வைகள்
கண்கொத்திப் பாம்பாய் சீறுகிறது.
தோளில் போட்ட தோழமை கரங்கள்
கழுத்தை இறுக்கி கொல்கிறது.
கூடவே நடந்த ஜோடி கால்கள்
கால்களை இடறிவிட்டுச் சிரிக்கிறது.
முகமூடி கிழிந்து இங்கே
நிஜ முகங்களின் சுயம்
வெட்ட வெளிச்சமாய்
கோரத் தாண்டவம்
ஆடி ஆணவம்
அங்கே அரங்கேறியது.
இத்தனை நாள் நடந்ததெல்லாம்
வெறும் நாடகமே ..
நாமும் அதில் பங்கேற்ற
கையாலாகாத பாத்திரமே.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (15-Sep-25, 9:00 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 32

மேலே