தீபாவளி வாழ்த்து ⚜️🪔🪔🪔🪔🪔

முத்தான ஒளிபட்டுக்
கொத்தான சொத்தெல்லாம்
பத்தாகப் பல்கிப் பெருகிட
மெய்யான நம் உணர்வெல்லாம்
தாமரைத் தடாகத்தில்
பட்டுத் தெறித்திங்கு
பாசாங்கு இன்றி
பார் போற்ற ஒளிர்ந்து
உற்றாரும் சுற்றாரும்
கூடி அங்கு நண்பருடன்
குதூகலிக்க வாழ்த்துகின்றோம்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (13-Oct-25, 9:25 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 811

மேலே