யோகராணி கணேசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : யோகராணி கணேசன் |
இடம் | : Norway |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 15931 |
புள்ளி | : 145 |
வாசிப்பதும் எழுதுவதும் என் இரு கண்கள். கேட்டதும், பார்த்ததும், ரசித்ததும், அனுபவமும் , உண்மையும் , கற்பனையும் என பற்பல பொருள் கொண்டு விரிந்து கொண்டிருக்கிறது எனது கவிதைகளும் சிறுகதைகளும்...... என்னை சூழ உள்ளவர்களின் எழுத்தார்வத்தை வளர்ப்பதற்காகவே வளர்ந்து கொண்டிருக்கிறது எனது தளம்! https://aasipori.blogspot.com
யாரையும் கேட்பதில்லை
எவரையும்தான்;
வாள்முனை வளைவுதான்
கள்வனின் அரிவாள்!
தெளிந்த வானத்தைக்
கிழித்தெறியும்;
திறந்த வெளியில்
யாருக்கும் பாதுகாப்பில்லை!
தூரம் நெடுந்தூரம்
தொலை தூரம்;
இடைவெளிகளை நிரப்புகிறது
மூச்சுக் காற்று!
இறக்கைகள் இருந்தென்ன
பாள்வேலி;
மூச்சுக் கொல்லி
மூலை முடுக்கெங்கும்
தாள்ப்பாளிட்டு தடுக்கிறது!
ஒருமுறை ஒருமுறையேனும்
பார்த்துவிட வேண்டும்;
உயிர் கொடுத்தவரின்
உயிர் பிரியுமுன்!
சிறுவர்கள் இலகுவான புத்தகங்களை விரும்புவதில்லை.பொதுவாக வளர்ந்த பிள்ளைகள், பெரியவர்கள் என எல்லோருமே சவால்கள் நிறைந்த நூல்களையே விரும்புகிறோம். இது சிறுபிள்ளைகளுக்கும் பொருத்தப்பாடானது. உண்மையில் அனேகமான சிறுவர்கள் உலகம் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய நூல்களை வாசிப்பதையே விரும்புகிறார்கள்.
யானைக்கு ஏன் பெரிய தும்பிக்கை இருக்கிறது? பண்டா என்னும் மிருகம் ஏன் மூங்கிலை மட்டும் உணவாக உண்கின்றன? நீர் ஏன் ஒழிபுகும் தன்மையுடையது? இவ்வாறான வினாக்களுக்கான விடைகளையே அறிய விரும்புகிறார்கள்.
சிறு பிள்ளைகள் சாத்தியப்படக்கூடிய எல்லா வகையான கேள்விகளையும் எழுப்புகிறார்கள்.
அவர்கள் ஆர்
17.04.2021 அன்று மாலை 6 மணிக்கு நண்பர்கள், வசந்தாவும் மாறனும் மற்றும் அவந்திக்காவின் பள்ளி நாள் ஆகிய மூன்று சிறுவர் சிறுகதைகள் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டது. தற்கால கொரோணா சூழ் நிலை காரணமாக இந்நிகழ்வு இணைய முற்றத்தில் Team செயலியூடாக அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அனுசரணையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மௌன அஞ்சலி, வரவேற்புரை,சுடர் வணக்கம், மங்கள விளக்கேற்றல், நூலாசிரியர்கள் அறிமுகம் ஆகியவற்றைத் தொடர்ந்து நூல்களுக்கான மதிப்பீட்டுரைகள் பல இலக்கிய ஆளுமைகளால் ஆற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து நூல்கள் வெளியீடு இடம்பெற்றன. நூல்களை நூல்களின் துணைக்கதாசிரியராகிய யோகராணி கணேசனின் துண
நட்போடு ஒரு பார்வை….
கனிசா, கஷ்வினி, கேவின் இவர்களோடு துணையாகத் தாயார் யோகராணி கணேசன் அவர்களின் கூட்டுத் தயாரிப்பான ‘நண்பர்கள்’ என்னும் சிறுவர் கதைத் தொகுப்பு வெளிவருகின்றது.
சிறுவனும் தானியங்கியும், ஒரு காட்டுப்பயணம், இரண்டு நண்பர்கள், எனக்கு உங்கள் மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்று தெரியுமா?, எதிரிகள் ஆகிய கதைகள் ஐந்துமே நட்பை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.
பொதுவாக சிறுவர்களுக்காக பெரியவர்களே சிறுவர் கதைகளை எழுதுவர். இதன்போது பெரியவர்கள் சிறுவர்களாக மாறி, அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து அவர்களுக்காக எழுதவேண்டிய தேவை ஏற்படுகின்றது. கத்தியின் மீது நடப்பது போன்ற கவனமுடன் செயற்படவேண்ட
நினைவுகளை கிளறி
கடந்த காலத்தை
கடைந்தெடுத்து
தவில் பாடி
ஒற்றைக் கனவில்
படகோட்டும் பலம்
தனிமைக்கே உரித்து
சிந்தனைத் திறன்
செயலாய் உருவெடுக்க
உடலும் உள்ளமும்
நின் மதிகொள்ள
இடம் கொடுத்து
வரம் தருவது
தவம் பெறும்
தனிமையில்தான்
சுய சிந்தனைக்கு
தாள்ப்பாள் இட்டு
காப்ரேட் கம்பனிகளின்
காசோலைக்கு கவிழ்ந்து
காலமோட்டும் காலமதில்
கொரோனா கொடுத்த
வைர விடுதலை
தனிமைப்படுத்தலில் தனிமை!
கச்சிதமாய் கைப்பற்ற
இதுவே தருணம்
சிந்தனை சிறக்க
இதுவே தருணம்
புதிய முய்ற்சிகள் சிறக்க
இதுவே தருணம்!
பச்சை என்பது துவக்கம்,
சிவப்பு என்பது நிறுத்தம்,j
மஞ்சள் என்பது தயார் நிலை.
இது வீதி விளக்கின் விதி .
வாழ்க்கை வழிக்கும் இது பொருத்தமென்பேன்.
பச்சை என்பதை கனிவென்று கொண்டு
நாளதைத் தொடங்கு.
சிவப்பு என்ற கோபம் வரும் நேரம்,
செய்தலை நிறுத்தி பின் செயலதைத் தொடங்கு.
மஞ்சள் என்பது மங்கலம் என்றே மனதில் நிறுத்தி,
சோம்பல் தவிர்த்து என்றும் தயார் நிலை கொள்.
வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள...
அம்மா அப்பா
கடந்து
வந்த
பாதையை அறிந்து
கொண்டாலே
போதும்...
மௌனத்தின் வேர்களை
மெல்ல தீண்டிய சலனமாய்
அழுகையின் ஒவ்வொரு
விசும்பலுக்கும் புதுப்புது காரணங்களை
பட்டியலிட்டு தன்னை தேற்றிக்கொள்ள
முயற்சிக்கும் மனது
இன்று ஏனோ கைகட்டி வேடிக்கை
பார்க்கிறது தண்ணீர் தீர்ந்துபோன
குளத்தை சுற்றிவரும் வெண்கொக்குபோல்...
கண்ணீரின் சுவடுகளை
தாங்கிக்கொண்டிருக்கும் கன்னங்களை
சுமைதாங்கியாய் உயர்த்திப்பிடித்தபடி...
சலனமில்லாது தனிமையில் உழன்றபடி...
தூக்கத்திலும் நிறைவாய் சிந்தித்தபடி.....
கவிதை
கதை
விவாதம்
சமர்ப்பிக்கவும்