srk2581 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  srk2581
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Apr-2017
பார்த்தவர்கள்:  141
புள்ளி:  53

என் படைப்புகள்
srk2581 செய்திகள்
srk2581 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2017 2:46 pm

உலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையது; சிறப்புடையது? என்ற கேள்வியுடன் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டது.
பழங்கள் ஒன்றுக் கொன்று அடித் தொண்டையில் குசுகுசுவெனப் பேசின.
ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் எல்லாம் ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி மார்தட்டின. ஆனால், திராட்சைப் பழம் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியுடன் இருந்தது.
எல்லாப் பழங்களும் திராட்சைப் பழத்தை வியப்புடன் பார்த்த வண்ணம் இருந்தன. திராட்சைப் பழம் எதையாவது

மேலும்

srk2581 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2017 10:57 pm

நரம்புகள் புடைத்து
இடுப்பு எலும்பு கழண்டு
கண்களில் நீர் தெறித்து
அலறலில் குரல் கிழிந்து

உச்சபட்ச வலியில் மரணத்தின் உச்சத்தை தொட்டு
செத்தேவிட்டோமென்று செல்கள் அழுது
இனி ஒரு பிள்ளை வேண்டாமென்று
ஆங்காரத்தில் சிந்தனை உடைந்து

செவியின் சவ்வுகள் ஆக்ரோஷத்தில் அடைத்து
சிறுதுளையைப் பிய்த்து
அடிவயிறு மரண பீதியில் மாய்ந்து
குடல்கள் சுருட்டி விழிகள் இருட்டி

வியர்வை பூத்து இமைகள் வியர்த்து
மெல்லிய குரலில் ஒர் அழுகையைக் கேட்க
இருதயமது அன்னிச்சையாய் இளகி விட
பிசு பிசு என்று ஒரு உடல் என்னிடம் வர

வலியெல்லாம் மறந்து
களைப்பெல்லாம் களைந்து;
உள்ளமது பூரித்து
முகம் முழுவதும் மகிழ்ச்சி

மேலும்

பிரசவத்தின் கஷ்டங்களை எல்லாம் அவளது கருவறைக்காலம் இஷ்டப்பட்ட முகத்தை கண்டதும் ஒரு நொடி புன்னகையில் மறைந்து போகிறது. தாய்மை இறைவன் அருளிய உயரிய வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 12:03 am
srk2581 - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2017 4:19 pm

மனசெல்லாம் மத்தாப்பாய்
மகிழ்வினில் மனம் பட்டாசாய்
இனிப்போடும் களிப்போடும்
இனம்சேர்ந்து கொண்டாடுவோம்
இல்லத்தில் அகலொளிர
இன்பத்தில் மனம் ஒளிரட்டும்
உள்ளத்தில் இருள் ஒழிந்து
எண்ணத்தில் அருள் விழிக்க
வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்....
சிதறும் பட்டாசுஒலி வாழ்வின்
சிரிப்பொலியாக மாறட்டும்
மிளிரும் மத்தாப்பு ஒளியும்
ஒளிரும் வாழ்வாய் இனிக்கட்டும்
தேனாய் இனிக்கும் இனிய
நட்புகள் நீங்கள் என்றென்றும்
வானாய் உயர்ந்து புகழுடன்
வாழ்வாய் என வாழ்த்துகிறேன்....
இன்றோடு துன்பங்கள் நீங்கி
என்றும் இன்பங்கள் மலரும்
தீபஒளியாக அமையட்டும் ....
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள்...

மேலும்

உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:11 pm
srk2581 - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2017 10:46 pm

பெண்களுக்கு ஆசைகள் அதிகம்
அன்பும் அதிகம்
என்றும் அவை ஆண்களுக்கு
நிகராகாது

வசதியாக வாழ்ந்திட ஆசை தான்
ஏழ்மையாய் இருந்தாலும்
அன்பால் அதை
ஏற்று நடப்பால்

அன்பால்
நீ எதையும் சாதிக்கலாம்
பெண்ணின் மனத்தையும்
வெள்ளலாம்

சின்ன சின்ன ஆசைகள்
அவளுக்கு அதில்
பெரிதும் இன்பம்
அவளுக்கு

கைக்கோர்த்து நடக்கவும்
உன் தோள் சாயவும்
உன் நெஞ்சில் முகம்
பதிக்கவும்

உன் கை அவள் கண்ணீரை
துடைக்கவும்
அவள் சமைத்த உணவை
நீ பாரட்டவும்

தினமும் காதல் செய்யவும்
செல்லசண்டை நடத்திடவும்
சண்டையின் சமாதானம்
முத்தமாகவும்

சிறு உதவிகள் அவளுக்கு
நீ செய்திடவும்
உறவு முடிந்தபின்
அவளை அனைத்து
தூங்க

மேலும்

மறுப்பில்லாத உண்மைகள். ஒரு பெண்ணின் இதயம் எப்போதும் தாய்மையின் நிலையில் பிறந்தது தான். வறுமையிலும் அன்பான வாழ்க்கை தான் பெரும் செல்வம் பெரும் செல்வம் உள்ளவர்கள் பலரின் வாழ்க்கை நிம்மதியின்றி தற்கொலையில் முடிகிறது. ஏழையானாலும் எளிமையான வாழ்க்கை ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிப்பதில் தீர்ந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 12-Oct-2017 10:09 am
srk2581 - srk2581 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2017 5:03 pm

என் இதயத்தை பிளந்து
உடைந்த விறகாக்கினாய் ...!
என் இரவை கிழித்து
பகலையும் ரணமாக்கினாய்..!
தூக்கம் வரும் முன்பே
தூக்கம் களைத்து
தூக்கிலிட செய்தாய்..!
உன் பார்வையாலே என்
பாதையையும் மாற்றி
உன் பாதசுவட்டில் பதியவைத்தாய்...!
என் ரத்த சூட்டில்
மொத்தமாய் குடியேறி
பித்தனாய் மாற்றினாய்...!
என் மொத்த பாவத்தையும்
மெத்தனமாய் தின்று செரித்தாய்...!
பொதும் போதும்
என்னை
மொத்தமாய்
கொன்றுவிடு...!
கொஞ்சம் கொஞ்சமாய்
தின்று விடாதே...!
வலிகள் என்பது
எனக்கு மட்டுமல்ல
உனக்கும் தான் !

மேலும்

நன்றி. 25-Sep-2017 1:30 pm
அவளுக்காகவும் அவனே வேதனை அனுபவிக்கின்றான் இது தான் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 12:52 am
மேலும்...
கருத்துகள்
மேலே