பிரிவின் வலிகள்
என் இதயத்தை பிளந்து
உடைந்த விறகாக்கினாய் ...!
என் இரவை கிழித்து
பகலையும் ரணமாக்கினாய்..!
தூக்கம் வரும் முன்பே
தூக்கம் களைத்து
தூக்கிலிட செய்தாய்..!
உன் பார்வையாலே என்
பாதையையும் மாற்றி
உன் பாதசுவட்டில் பதியவைத்தாய்...!
என் ரத்த சூட்டில்
மொத்தமாய் குடியேறி
பித்தனாய் மாற்றினாய்...!
என் மொத்த பாவத்தையும்
மெத்தனமாய் தின்று செரித்தாய்...!
போதும் போதும்
என்னை
மொத்தமாய்
கொன்றுவிடு...!
கொஞ்சம் கொஞ்சமாய்
தின்று விடாதே...!
வலிகள் என்பது
எனக்கு மட்டுமல்ல
உனக்கும் தான் !