தோள்தழுவும் கூந்தலோ தென்றலின் வண்ணச் சோலை

தோள்தழுவும் கூந்தலோ தென்றலின் வண்ணச் சோலை

சலசலக்கும் ஓடைச்சந் தம்நின் கவிதை
மலர்மலரும் போதிலுன் மௌனயெழில் புன்னகை
தோள்தழுவும் கூந்தலோ தென்றலின்வண் ணச்சோலை
வாள்வீசும் காதல் விழி

--- இரு விகற்ப இன்னிசை வெண்பா-

சலசலக்கும் ஓடைச்சந் தம்நின் கவிதை
மலரிலுன் புன்னகை மௌனம் --மெலிதாக
தோள்தழுவும் கூந்தலோ தென்றலின்வண் ணச்சோலை
வாள்வீசும் காதல் விழி

---- இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-25, 8:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே