கவிஞர் கலவரப்பள்ளி
ஒரு மாத இதழ் அலுவலகம். அந்த இதழின் ஆசிரியர் அறையில்:
தம்பி, எனது அழப்பை ஏற்று எங்கள் அலுவலகத்துக்கு வந்ததற்கு மிக்க
நன்றி.
@@@@@@@@@@
நான் தான் ஐயா உங்களுக்கு நன்றி சொல்லணும். கடந்த ஒரு வருடமா
மாதந்தோறும் எனது கவிதை ஒன்றை வெளியிட்டு ஒவ்வொரு கவிதைக்கும்
பரிசாக ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கினீர்கள். இப்போது என்னை
அழைத்து தங்கள் ‘முத்தமிழ்’ இதழில் உதவ ஆசிரியர் பணியும்
வழங்கியுள்ளீர்கள். எனக்குத் தங்க இருப்பிடம், உணவு கொடுப்பதுடன் மாதம்
நாற்பதாயிரம் ரூபாய் சம்பளமும் தர சம்மதித்துள்ளீர்கள். உங்களுக்கு
எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை ஐயா.
@@@@@@@
தம்பி கலவரப்பள்ளி கூர்நோக்கன் இனிமேல் உங்கள் பெயர் உதவி ஆசிரியர்
‘கவிஞர் கலவரப்பள்ளி’ என்றே இருக்கும். சம்மதம்தானா?
@@@@@@@@@@
தங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஐயா. என் கொள்ளுப்பாட்டன்
காலத்தில் எங்கள் ஊரில் கலவரம் நடக்காத நாளே இல்லை. அற்ப
விசயங்களுக்கு எல்லாம் அடித்துக்கொள்வார்கள். இப்போதே சொல்லவே
வேண்டாம். அங்குள்ள குட்டி அரசியல்வாதிகளும் போலி பக்தர்களும் தான்
அங்கு நடக்கும் கலவரங்களுக்குக் காரணம். அப்பாவிகளைத் தூண்டிவிட்டு
கலவரம் செய்யச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். அப்பாவிகள்
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு காவல் நிலையத்துக்கு நடந்து
கொண்டிருப்பார்கள்.
@@@@@@
அப்படியா?
@@@@@@@@
ஆமாங்க ஐயா.
@@@@@@@@
எல்லாம்அவர்களின் சுயநலத்திற்காக அப்பாவிகளைப் பலிகிடா
ஆக்குகிறார்கள். பல
ஊர்களில் இதுதான் நடக்கிறது. மக்கள் தொகைக்கேறப காவலர்
எண்ணிக்கை இல்லை. பள்ளிகளில் நீதிபோதனைகளைச் சிறப்பாக நடத்தி
நல்ல குடிமக்களை உருவாக்க வேண்டும். கற்றவர் அனைவருக்கும் நாட்டின்
உண்மை வரலாறு, மொழியறிவு, மொழிப்பற்று, பண்பாடு தெரிந்திருக்க
வேண்டும். கற்ற ஒருவர் கல்லாத பத்துப் பேரையாவது
நல்வழிப்படுத்தவேண்டும். மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்.
எல்லோரும் சிந்திக்க ஆரம்பித்தால் கலவரத்தைத் தூண்டுவோர் காணாமல்
போவார்கள் ஐயா.
@@@@@@
சரி தம்பி ‘முத்தமிழ்’ இதழ் வளர்ச்சிக்கு உதவி ஆசிரியர் என்ற முறையில்
உனது திட்டம் என்ன?
@@@@@@@@@@@
ஐயா தற்போது ‘முத்தமிழ்’ மாதம் மூன்று இலடசம் சந்தாதாரர்கள்
உள்ளார்கள். அதைப் பத்து இலட்சம் ஆக்குவதே எனது நோக்கம்.
திறமையான வேலயில்லாப் பட்டதாரிகளின் அமைப்பு ஒன்றை உருவாக்கி
அவர்கள் மூலம் ‘முத்தமிழ்’ இதழ் பட்டிதொட்டியெங்கும் உள்ள
நூலகங்களைச் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள
பணக்காரர்களை ஆயுள் சந்தாதாரர்கள் ஆக்கினால் கண்டிப்பாக இரண்டு
ஆண்டுகளில் பத்து இலடசம் என்ற என் இலட்சியம் நிறைவேறும் ஐயா.
@@@@@@@@@@@@@
வாழ்த்துகள் தம்பி கவிஞர் கலவரப்பள்ளி.