உறவுகள்

கருவில் இருந்து கல்லறை சேரும் வரை..
ஏதோ உறவு கூடவே வரும் அதுவரை..
மூன்றெழுத்து உறவு படிப்பதற்கு நன்று..
புரியாத புதிர் தான் உறவுகள் இன்று..

உணர்வு புரிதலே வளர்க்கும் உறவை..
விட்டுக் கொடுத்தலே தவிர்க்கும் பிரிவை..
இன்பம் தனில் சேரும் துன்பம் தனில் விலகும்..
நிழல் உறவுகள் எதுவென நமக்கும் விளங்கும்!

சொல் ஒன்று கூறி செயல் ஒன்று செய்யும்
எதிர்மறை நடத்தையால் நிம்மதி கொய்யும்..
இருந்தும் இல்லாதாகும் உறவுகள் கானல் நீரே..
கண்டறிந்தால் விலகி விடு, வேண்டாம் கண்ணீரே!

மெய்யான உறவு உண்மையே கூறும்..
சினம் கொண்டாலும் உன்னையே சேரும்!
வஞ்சப்புகழ்ச்சியால் மயங்காதே மனமே..
காகித உறவென அறிவாய் அக்கணமே!

உறவுகளால் சிறக்கும் நம் தேசம்,
அதனால் வளரும் மனிதனிடம் நேசம்!
உறவுப் பூட்டுகள் பல வகையே..
அன்பும் பாசமும் திறக்கும் சாவியே!!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (14-Nov-25, 10:14 pm)
Tanglish : uravukal
பார்வை : 22

மேலே