இதயக்கரையில் சேர்ந்துவிடவே
ஏனோ நீ வெட்கம் கொள்ளும் போதெல்லாம்
வானவில்லின் அத்தனை வண்ணங்களும் வந்து
ஒட்டிக் கொள்கின்றன உன் மேனியில்....
பூக்களுக்கும் வலிக்காமல் சிரிக்கும்
வித்தையைக் கற்றுக் கொண்டவளே
காரணம் ஏதுமில்லை உன்னுடன் நான்
காதல் கொள்ள உன் அன்பை தவிர...
கண்மூடி மயங்கி நிற்கிறாயே
காதல் மஞ்சத்தில் என்னை தள்ளிவிட்டு
காற்றுக்கும் வியர்க்க வைத்து விடுவாயடி
உன் காந்தப் பார்வையிலே...
மெல்ல இமைகளை திறந்துவிடு
களவுப் போக காத்திருக்கிறேன்
இமையென்ற குளத்தில் இறங்கி
இதயக்கரையில் சேர்ந்துவிடவே