வாடி நிற்கின்றேன்
வாடி நிற்கின்றேன்...
06 / 04 / 2025
ஏ..பட்டாம்பூச்சியே !
உன் வண்ணம் கண்டு
என் எண்ணம் கலங்கி
மனம் மயங்கி
மதியிழந்து
உனை நம்பி
மலர்ந்து நின்றேன்.
உன்னை ரசித்துத்தான்
என் இதழ் விரித்தேன்.
என்னை ருசித்த பின்
நீ மலர் தாவினாயோ?
ஐயகோ...
மலருக்கு மலர் தாவும்
உன் குணத்தை காணாது
இருந்துவிட்டேன்.
இப்போது
இதழ் இழந்து
நிலைகுலைந்து
வாடி நிற்கின்றேன்.