கனிவுடன் பேசல் களிப்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நன்சொல்லைப் பேசுவதால் நன்மை பெருகிவரும்
புன்சொல்லைப் பேசிப் பொறிகலங்கல் – நன்றோ;
இனியவை பேசியென்றும் இன்பம் பெறுவோம்
கனிவுடன் பேசல் களிப்பு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-25, 8:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே