உன் மேல் நான் கொண்ட காதல்
நீ என்னை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு,
நான் எதுவும் செய்யவில்லை, ஆம், ஆனால்,
உன்னை மறக்க முடியாத அளவிற்கு,
நான் நேசித்திருக்கிறேன், நேசிக்கிறேன்.
என் முகம் தோற்றம் மாறினாலும்,
உன் முகத் தோற்றம் மறக்கவில்லை,
நான் வாழும் இடம் மாறினாலும்,
உன்னை சந்தித்த இடம் மறக்கவில்லை.
தூர தேவதையே! தொலைதூர தேவதையே!
தொலைந்து போனது நீ தானே! கண்ணே!
தொலையவில்லை உன் நினைவே! அன்பே!
உன் நினைவில் நானுண்டா? மெய் பேசு.
உன் மேனியொன்றே என் நேசிப்பானால்,
வேறு மேனியொன்றில் உன்னை மறக்கும்
உபாயம் கிடைத்திருக்கும், அவ்வாறில்லாமல் என் மனதை
முழுமையாக ஆட்கொண்டிருக்கும் உன் மேல் நான் கொண்ட காதல்.