நிரந்தரமானாய் என் நினைவேட்டிலே
சல் சல் சல் கொஞ்சும் கொலுசு சத்தம்,
சில் சில் சில் நெஞ்சில் கெஞ்சும் உன் ஞாபகம்,
கல் கல் கல் பாறாங்கல் உருகும் என் இதயம்,
இல் இல் தில் இல்லாமல் இழந்தேன் உன்னை.
ஒப்பிட்டிலே தோற்றேன்; உன்னையே நேசித்தேன்,
காப்பிட்டிலே நம்பிக்கை இழந்தேன்; கனவாய் நீ,
செப்பேட்டிலே எழுதாத செங்கமலமே; வானதேவதை நீ,
மதிப்பேட்டிலே குறிக்கப்படாத நீ; நிரந்தரமானாய் என் நினைவேட்டிலே...