நீ என் பச்சை ரத்தம் சுவைக்கும் தீயோ

பனித்துளியுள்ளே நின்றமரமல்லோ
கதிர்வரவானில் கதிர்பட்டுக்கரையுது

நம்மனதினுள்ளே கொண்டகாட்சியோ
சோகப்பிரிவால் வெளிரப்போகுதே


வலிகளை மறைக்கத்தான்நான்
கசக்கும்மதுவையும் அமுதெனவுண்டேன்

வாழ்நாள் முழுதும்மறவேன் உன்னை
மறந்தாலும் செத்துடுவேனடி

நடுக்கடலில் வழிதப்பியோடும்
நாவாய்கூட கரைசேருதடி

காதலிலும் வழிதப்பியோடும்
மனங்களுமே இங்கு கூடிடுமா


கடலலை கரையைத்தொட்டாலும்
கடலில்போயே சேர்ந்துகலந்திடுது

ஊடலால் விட்டுப்பிரிந்தவளும்
இங்குவந்தெனையே சேர்ந்திடுவாயோ

இல்லை நீ எந்தன் மனதைக்கொன்று
பச்சை ரத்தத்தையே சுவைக்கும்தீயோ

அறியாமல் பதறுகிறேன் உண்மை
புரியாமல் அலைகின்றேனே

எழுதியவர் : Golden vibes (22-Nov-24, 10:52 pm)
பார்வை : 60

மேலே