அன்பைத் தேடி

அன்னையின் கருவறை தந்த பாதுகாப்பை,
சொந்த ஊரும் தராது, சொந்த பந்தமும் தராது,
அங்கேயே தங்கிவிட்டால் வாழ்க்கையில் வளர்ச்சியெல்லாம்
கனவாகும், அன்பைத் தேடி.

கருவறையை விட்டு வெளிவராத குழந்தை போல
பிறந்த ஊரிலே அரசாட்சி செய்யும் அனைவருக்கும்,
காலம் உணர்த்தும் உண்மை, வளர்ச்சி வேண்டுமெனில்
வெளியே வா, அன்பைத் தேடி.

பொறுமை இல்லாத அவசரம், ஆபத்தறியாத பயணம்,
பொறாமை வளர்க்கும் வேடிக்கை, எல்லாம் தவிர்த்து,
உன் திறமை வளர்த்து, முன்னோக்கி பயணம் செல்ல,
முடிவெடுத்து வா, அன்பைத் தேடி.

காசு, பணம் கழுதையும் சம்பாதிக்கும், உலகை வடிவமைக்கும்
கைகளுக்கு வலிமை வேண்டும், வானம் வசப்படும்,
பேரன்பின் துணையோடு வாழ்க்கை வாழணும்,
அன்போடு வா, அன்பைத் தேடி.

கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத
விடயங்கள் பல பூலோகத்தில் உண்டு,
புரிந்தால்,
தெளிந்துவிடும் போதை மயக்கம், அதிகாரம் ஒழித்து,
ஆனந்தமாய் வா, அன்பைத் தேடி.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Dec-25, 2:28 am)
Tanglish : anbaith thedi
பார்வை : 115

மேலே