arsm1952 - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : arsm1952 |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 26-May-1952 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 1056 |
புள்ளி | : 692 |
படிப்பு : B .Sc .,B .L .,
பை நிறையப் பணமிருந்தாலும்,
மனம் நிறைவு என்றாகுமா?
குணம் நிறையப் பெற்றிருந்தாலும்,
பை நிறைக்கப் பணமாகுமா?
இருப்போரிடையே எல்லாம்
நலமே என்ற நினைப்பதும்,
இல்லாதோரிடம் எதுவும்,
இல்லை என்று கொள்வதும்,
அறியாமையின் உச்சமாகும்.
இருப்போரும் வாழ்கின்றார்,
இல்லாதோரும் இருக்கின்றார்,
கொடுப்பது அவன் செயல்
காப்பது அவன் வழி.
படியளப்பான் ஈசன்,
பகுந்தளிப்பான் நேசன்,
தகுதியறிந்து தந்திடுவான்,
பார்தறியா பரந்தாமன்.
செம்மை சீர் செவ்வாயில்
செங்கதிரோன் பேர் ஓங்கும்,
பார் காக்கும் உழவோடு,
பண்பு நிறை நம் தமிழ் மொழி கொண்டு,
நாடெல்லாம் வளம் பெறவே,
வீடெல்லாம் ஒளி சிறக்க,
பொங்கலோ, பொங்கலென,
பொங்கட்டும் மகிழ்ச்சி.
பொங்கல் வாழ்த்துக்கள்.
இனியவன் ஆதி முதல்வன்,
அவனே ஆதி சைவன்,
அவனை ஆழ்ந்து தொழுதால்,
அத்தனையும் தந்திடுவான்.
சிந்தையில் நிறைந்திடுவான்,
நிந்தைகள் அகற்றிடுவான்,
விந்தைகள் புரிந்திடுவான்.
வித்துக்கு வினையாயிருப்பான்,
சொல்லுக்கு முதலாயிருப்பான்,
கருத்துக்கு முடிவாயிருப்பான்.
தித்திக்கும் மொழி தருவான்,
எத்திக்கும் நிறைந்திருப்பான்,
முக்திக்கு முதலானவன்,
சக்திக்கு உயிரானவன்.
படித்தவர்க்கும், பாமரர்க்கும்,
பக்கத்திலிருப்பான்,
பரமனவன், படித்தறியா வேதம் அவன்.
நினைவில் நிறுத்தி வணங்கிட,
நித்தம் உடன் இருப்பான்.
அவன் தான் மதுரை வாழும் சொக்கனவன்.
கூட்டுக் குடும்பங்கள் வாழ்ந்த காலம்,
கேட்டுத் தெரிந்து கொள்ளும் சமயமிது.
வீதிக்கு வீதி வீடுகள் தனித்தனியாய் இருந்த போது,
வாழ்ந்தவர்கள் அரவணைப்பு ஆயிரம்.
தெரியாதவர் என்ற யாருமில்லை,
வசதிகள் அதிகமில்லை என்ற போதும்,
வரம்பு மீரா தொல்லையில்லை.
உறவுகள் உன்னதம் சொல்லாமலே புரிந்தது,
கள்ளம், கபடம் தெரியாமலே இருந்தது.
உண்மையின் உயர்வுகள் மனதில் நின்றன,
சொல் வாக்கும், செல்வாக்கும் மாறாமல் வளர்ந்தது.
இன்று........
அடுக்கு மாடி குடியிருப்பில்,
அருகருகே இருக்கும் போதும்,
அடுத்த வீட்டில் இருப்பது யார் என்று,
தெரிந்து கொள்வதில்லை.
காலுக்குக் கீழே தளமும் நமக்கில்லை,
கைக்கு மேலே
நற்றமிழ் நயம் பட உரைத்து,
சொற்பொருள் பெருக்கி,
கற்றவர் கருத்துரு செதுக்கி,
நலம் தரும் கவி பல படைத்து,
வளம் காண்பதும் சேர்ப்பதும்,
செந்தமிழுக்கு சிகரமாகும்.
வான் முட்டும் மாடக் கோபுரங்கள்,
மலர் இதழென வரிசை வீதிகள்,
மாதமெல்லாம் திருவிழாக்கள்,
சொக்கன் கொடுத்த நதியும்,
சொல்லமுடியாப் பேரழகு மீனாட்சி தாயும்,
கால்மாறி ஆடிய கவின் மிகு ஈசனும்,
நாளும் கருத்தாய் காத்திடும்,
மண்ணு புகழ் தங்கும் மா மதுரை இது.
நினைக்காத ஒன்றும்,
நடக்காத ஒன்றும்,
நடந்து விட்டால் , அதுவே ஆச்சரியம்.
பார்க்காத ஒன்றும்,,
படிக்காத ஒன்றும்,
பார்த்து விட்டால், அதுவே அதிசயம்.
கிடைக்காத ஒன்றும்,
தொலைந்த ஒன்றும்,
கிடைத்து விட்டால், அதுவே அதிர்ஷ்டம்.
தெரியாத ஒன்றும்,
புரியாத ஒன்றும்,
புரிந்து விட்டால், அதுவே அனுபவம்.
கால்கள் ஓட தூரங்கள் கடந்துவிடும்,
காலங்கள் ஓட துயரங்கள் மாறிவிடும்,
மனம் மாற துன்பங்கள் நீங்கி விடும்,
குணம் கூட பெருமை தேடி வரும்.
நினைப்பெல்லாம் உழைப்பென்றால்,
உயர்வு உன்னை நாடி வரும்.
உண்மையே உன் வழியென்றால்,
உயர்வே உன் மொழியாகும் .
உதவிக்கு நீ கரம் நீட்ட,
மனதினில் நம்மதி கூடும்.
மனம் நினைக்க உடன் கொடுப்பது,
உன்னதப் பண்பாகும்.
இருப்பதில் கொடுப்பதே இன்பம்,
இல்லாதவர் பெறுவதே தர்மம்.
இல்லை என்பது இல்லாமல் போவது,
மண்ணின் உயர்வாகும்.
வளைத்து எழுது -----புதுக் கவிதையில் எழுதவும்
வளைந்து கொடுத்துநீ வாழ் ----என்ற ஈற்றடி அமைய வெண்பா எழுதவும் புதுக் கவிதையிலும் எழுதலாம் .
----கவின் சாரலன்
ரகசியம் பாதுகாக்கபடும் இடம் எது.?
1- ராணுவம்
2-ஐ.நா சபை
3-அரசியல்
4-அப்பல்லோ மருத்துவமனை
நன்றி.:நாகூர்கவி
பனித்துளி படர்ந்த பசும்புல் விரிப்பினில்
கனிவுடன் பார்க்கும் அழகுமிகு பறவை !
காணும் படமோ எடுத்தவர்க்கு பெருமை
நோக்கும் அழகோ அதனினும் அருமை !
எண்ணத்தில் தோன்றும் என்ன அதற்கும்
ஏக்கத்தில் விழியும் தாக்குண்டு வழியுதே !
மனிதம் மண்ணில் மறைந்தது காரணமா
மனிதரும் நம்மை மறந்தனரே என்கிறதா !
அலைபேசி கோபுரம் அடிக்கிறது எங்களை
அலைந்து திரிந்து அழிகிறோம் நாங்களும் !
விஞ்ஞானம் வளர்த்து விரட்டினர் எங்களை
விண்ணில் பறக்கவும் தடையா எங்களுக்கு !
சிந்திக்க வைக்கிறது சிந்தையை தொடுகிறது
நிந்திக்கும் பறவையின் வார்த்தையும் புரிகிறது !
காத்திடுவோம் பறவை இனத்தை இவ்வுலகில்
வகுத்திடுவோம் வழியு
நண்பர்கள் (54)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

உதயசகி
யாழ்ப்பாணம்

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
இவர் பின்தொடர்பவர்கள் (54)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்
முத்துலாபுரம் தேனிமாவட்

ஆரோக்ய.பிரிட்டோ
இடையாற்றுமங்கலம்
