மா மதுரை
வான் முட்டும் மாடக் கோபுரங்கள்,
மலர் இதழென வரிசை வீதிகள்,
மாதமெல்லாம் திருவிழாக்கள்,
சொக்கன் கொடுத்த நதியும்,
சொல்லமுடியாப் பேரழகு மீனாட்சி தாயும்,
கால்மாறி ஆடிய கவின் மிகு ஈசனும்,
நாளும் கருத்தாய் காத்திடும்,
மண்ணு புகழ் தங்கும் மா மதுரை இது.