காணிக்கை
புண்ணியம் கோடி,
பண்ணியவர்கள் ஆயிரமாயிரமாம்.
தெள்ளிய நுண் மதியால்,
தெளிந்த நல் வழியாம்
மருத்துவ சேவைதனை
கரும மிகு சோதனையாய்,
வணங்கத்தகு சாதனையாய்
பணிதனை செய்திடும்
மருத்துவர்,செவிலியர்,
மருத்துவ மனை ஊழியர்,
காவலர், சுகாதாரம் பேணிடும்
துப்புரவாளர்கள் எல்லோரும்
எல்லாமாய் முன் நிற்பது
ஈடாகும் ஏழேழு பிறவிப்
புண்ணியமாம்.
நெருடல் மிகு பெரும் பாடு
நினைக்கவில்லை தன் நினைவு,
குடும்பம், மனைவி, பிள்ளைகள்
அத்தனையும் பின் தள்ளி
ஆற்றுகின்றார் சேவை ஆயிரமாயிரமாய்.
கடவுள்தனை கண்டதில்லை,
காதாரக் கேட்டதுண்டு,
உங்கள் வடிவிலே,
கண் நிறையக் கண்டோம்
கை கூப்பி வணங்குகின்றோம்.