எங்கும் நானே எதிலும் நானே-----இஷான்
விடியலின் பிரசவத்தில்
அழுது விழும் அனாதைப்
பனி நான்....
கதிரவனின் துப்பாக்கியால்
தடயம் இன்றிப் போகும்
சின்ன முக நிழல் நான்....
அலைகளின் மிடுக்கு நடையால்
கரைகளை கருக்கட்டமுடியாத
சிற்றலைகள் நான்....
சிறுவர்களின் ஐவிரல் சிறைக்குள்
அகப்பட்டு,விடுதலை தேடும்
கடல் நண்டுகள் நான்...
உள்ளுணர்வில் ஊஞ்சலாடி,
அந்தரங்க கதை பேசும்
மோனாலிசா நான்...
(இஷான்)