சமூகத்தில் முட்டாள் என்பவர்-அண்ணாவின் பார்வையில்

சமூகத்தில் முட்டாள் என்பவர்-அண்ணாவின் பார்வையில்

பார்வை: அண்ணா சிறுகதைகளின் தொகுதி-4
ஆசிரியர் : அண்ணா
பதிப்பகம்: வைகுந்த் 275, கணபதி நகர், நாகர்கோயில்

சமூகம் ஒரு சில மனிதர்களுக்கு அளிக்கும் இந்த பெயர்கள் எவ்வளவு அழகாக பொருந்துகிறது பாருங்கள். அதாவது இந்த பெயருக்கு பொருந்தி போகும் மனிதர்களை கவனியுங்கள்.
உங்களுக்கு அண்ணா எழுதிய கதை ஒன்று சொல்லுகிறேன் ஒரு மூன்று சகோதரர்கள், அதில் முதலாமவன் வீரன் இராணுவத்தில் இருக்கிறான், இரண்டாமவன் வியாபாரி பக்கத்து ஊரில் கொள்ளை கொள்ளையாய் வியாபாரத்தில் கொழிக்கிறான். கடைசியவன் பெயரே “முட்டாள்” தான் காரணம் அவன் பெயரே பலருக்கு மறந்து விட்டது. அவன் வெறும் உழைப்பாளி. தந்தையின் சொத்தான விளை நிலங்களை கொத்தி விவசாயம் செய்து கொண்டிருக்கிறான்.
சொத்து பிரிவினைக்காக தந்தையிடம் வந்த அண்ணன்மார் இருவரிடம், தந்தை சொல்கிறார், கடைசியவனை அழைத்து வா, அவனை இவர்கள் போய் அழைக்க அவன் இந்த கழனி விவசாய வேலைகளை முடித்துவிட்டுத்தான் வருவேன் எங்கிறான்.
தந்தையிடம் சென்ற அவர்கள் அப்பா அவன் ஒரு முட்டாள், எல்லா வேலையும் முடித்துவிட்டுத்தான் வருவேன் என்கிறான்.
அப்படியா அவன் முட்டாள் ஆயிற்றே, அதனால் தந்தையின் சொத்தை சிரமப்ட்டு பாதுகாக்கிறான். அதனால் இது அனைத்தும் என்னுடைய சம்பாத்தியம் ஆகையால் அதை அந்த முட்டாளுக்கே எழுதி வைக்கிறேன் என்கிறான்.
அண்ணன்மார் இருவரும் திகைத்து நிற்க அங்கு வந்த கடைசியவன், தந்தையிடம் சண்டையிட்டு அண்ணன்மார் இருவருக்கும் அவர்கள் கேட்ட பங்கை பிரித்து கொடுக்கிறான்.
பங்கை வாங்கி சென்ற அண்ணன்மார் இருவரும் கடைசி தம்பியை இப்படி சொல்கிறார்கள் “அவன் ஒரு முட்டாள்” எங்காவது தனக்கு வந்த சொத்தை இப்படி பிரித்து தருவானா?
அவர் எழுதியிருந்த காலத்தில் இருந்து இன்று வரை முட்டாள் என்று சுலபமாக நம்மால் அழைப்பவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். காரணம் நாம் புத்திசாலித்தனம் என்று நினைப்பது எல்லாம் வஞ்சகம், ஏமாற்றுதல் மற்றும் பிறரை சிக்கலில் சிக்க விடுதல், இவைகளைத்தான் புத்திசாலித்தனம் அல்லது சாணக்கியத்தனம் என்கிறோம்.
அடுத்து அண்ணா தொடர்ந்து சொல்கிறார் முட்டாள் அரசராக இருக்கும் சேனையில் சாத்தான் தலைமைக்கு வந்து முட்டாளிடம் கேட்கிறது அரசே உத்தரவு கொடுங்கள் ஒரு சேனையை திரட்டுகிறேன் என்கிறது.
சரி திரட்டி பாடக்கற்று கொடு என்கிறான் முட்டாள்.
மக்களோ சேனையில் சேர விரும்பவில்லை, சாத்தான் சம்பளம் நிறைய கிடைக்கும் என்கிறான்.
“அட போப்பா” உன் சம்பளம் யாருக்கு வேண்டும், எங்களுக்கு தேவையானது எல்லாம் இருக்கிறது.
சேராவிடில் அரசர் உங்களை கொன்று விடுவார் என்று பயமுறுத்துகிறது.
மக்கள் அரசரிடம் சென்று அரசே நாங்கள் சேனையில் சேராவிட்டால் எங்களை கொன்று விடுவீர்களாமே?
முட்டாள் அரசனுக்கு புரியவில்லை நான் ஒருவனே உங்களை எப்படி கொல்லமுடியும்? நான் முட்டாளாயில்லாவிட்டால் இதை உங்களுக்கு விளக்கி சொல்லுவேன். என்ன செய்வது எனக்கே புரியவில்லை.
இன்னொரு கதையையும் சொல்கிறார் சாத்தான் இன்னொரு வழியில் சென்று இந்த நாட்டின் மீது படையெடுக்கிறான்.
முட்டாள் ராஜ்யத்து மக்களுக்கோ இவைகளை கண்டதும் ஓடி வந்து வேடிக்கை பார்க்கின்றனர். எதிரிகள் தானியங்களையும், ஆடு மாடுகளையும் கொள்ளையடித்தனர். இவ்ரகளோ கொடுக்கமாட்டேன் என்று மறுக்கவில்லை, இந்தாருங்கள், உங்கள் நாட்டில் இதுவெல்லாம் கிடைக்காதா? எடுத்து கொள்ளுங்கள் என்கிறார்கள்
கொள்ளையடித்த சூரர்கள் சோர்ந்து போகிறார்கள். மன்னனிடம் போய் சொல்ல சாத்தானாய் இருக்கும் மன்னன் எல்லா பொருட்களையும் எரித்து அழிக்க சொல்லுகிறான்.
அவர்கள் எரித்து அழிப்பதை பார்த்த இந்த நாட்டு மக்கள் “அட வெட்டியா நெருப்பு வச்சு அழிக்காதே எடுத்துட்டு போய் நீ அனுபவி” என்று அழுது கொண்டே கையில் கொடுக்கிறார்கள்.
எரிக்க வந்த வீர்ரகளும் ஓவென அழுகிறார்கள். இதென்ன இத்தனை நல்லவர்களாய் இருகிறார்களே இந்த முட்டாள் ராஜாவின் மக்கள்.
முட்டாள் என்போருக்கு “டால்ஸ்டாய்” ஒரு கதையை தீட்டி இருக்கிறார்.
சாத்தான் என்றால் என்ன?
பிசாசு
பேய்-பூதம்-பிசாசுகளில் நம்பிக்கை உணடா?
உண்டு
அவைகளை பார்த்திருக்கிறாயா?
தினசரி பார்த்தவண்ணம்தான் இருக்கிறேன்
விளையாடுகிறாயா?
விளையாடவில்லை தோழா பேயும், பிசாசும் மறைந்து வாழ்வில்லை. மனிதர்களிடமே இருக்கிறது. இவைகள் இருட்டில் மட்டும் இருக்கும் என்று நினைக்கிறாயா? மனித மந்தையில்தான் அவைகள் வாழும்.
எப்படி கண்டுபிடிப்பது?
அவ்வப்போது அதன் குணாதிசயங்களாக மனிதர்கள் மூலம் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Sep-25, 9:23 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 10

மேலே