ஐவரையுஞ் சாரார் பகைபோற் சலித்து – சிறுபஞ்ச மூலம் 41

நேரிசை வெண்பா

பூவாதாள் பூப்புப் புறங்பொடுத் தாளிலிங்கி
ஓவாதாள் கோலம் ஒருபொழுதுங் - காவாதாள்
யாரார் பிறர்மனையாள் உள்ளிட்டிவ் வைவரையுஞ்
சாரார் பகைபோற் சலித்து. 41

– சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

அறிவுடையார்,

பருவமடையாத கன்னி, மாதவிடாய் நீங்கியவள், தவமுடையவள்,
ஒருபொழுதும் அலங்காரம் செய்தல் நீங்காத கற்பைக் காவாத பரத்தை,
யார்யாரோ பிறர்க்குரிய மனையாள் உள்ளிட்ட ஐவரையும், பகைவரைப்போல் வெறுத்து சேரார்.

கருத்துரை:

பூவாத கன்னியையும், பூப்பு நீங்கிய விருத்தமாதையும் தவப்பெண்ணையும் வேசியையும் பிறர் மனையாளையும் அறிவுடையார் சேரமாட்டார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Oct-25, 3:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே