இஷான் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இஷான்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  29-Sep-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-May-2019
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  16

என்னைப் பற்றி...

கவிதையோடு உறவாட பிறந்தவன் நான்...❤

என் படைப்புகள்
இஷான் செய்திகள்
இஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2019 1:47 pm

கலங்காதே கண்மணியே
உன் உயிறோரம் என்னை வைக்கிறேன்
துடிக்காத என் மானே
துறவாக என் இதயம் தருகிறேன்

நீ அழாதே நான் நனைந்து போவேன்
நீ கரையாதே நான் தொலைந்து போவேன்

உன் உறவுகள் மொத்தம்
எந்தன் விழிகளுக்குள்...
உன் உணர்வுகள் கூட்டம்
என் செவிகளுக்குள்....
உன் தனிமைகள் யாவும்
எந்தன் மடியருகில்...
உன் கனவின் கருத் தோன்றல்
என் நரம்பின் ஒன்றினைப்பில்...
தலையாட்டு போதும் தசையாக இருக்கிறேன்...
தலைதூக்கிப் பாரு அன்பே
உன் உயிரில் சாய்கிறேன்.....(இஷான்💚)

மேலும்

இஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2019 4:10 pm

பெண்மையே உன்னை எழுத
ஆண்மைதான் தகுதி நீ சான்றுதல்
தந்தால் மட்டுமே....
உன்னை புரட்டிப் பார்த்து விட்டு
என் சிந்தனை இளைப்பாறுகிறது
எந்தக் கோணத்தில் உன்னை எழுத்தால்
செதுக்குவதன்று...

"பெண்மையை தன்மையாக தாய்மையில்
தாலாட்டிப் பார்க்கிறேன் வரிகள் உறங்கிக்
கொள்கிறது..."

"சரி பெண்மையை மனைவியின் கருத்தாவாக புகுத்திப் பார்க்கிறேன் தொடக்கப் புள்ளியே
தொடுவானம் தொடுகிறது..."

"பெண்மையை மகளாக மொழிகளால்
பதித்து தக்கவைக்கப் பார்க்கிறேன்
ஏனோ கோணம் கோணலாகிறது"

"பெண்மையை தங்கையாக கவிக்களிப்பால் சீராட்டிப் பார்க்கிறேன் அதன் அமைப்பு அ

மேலும்

இஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2019 7:29 pm

எங்கே கண்மணி நீ இருக்க
உயிரும் உன்ன தேடி நாள் வதைக்க

சம்பவமாக நீ வரனும் சத்தியமா?
சம்மதமாக நீ வளையனும் பத்திரமா?
கண்ட காதல் யாவும்
கானும் காதல் யாவும்
கட்டிவைச்ச காதலும்
கட்டிடமா உனக்கே கட்டிடமா..
கேட்டுவச்ச நாட்களும்
தேக்கிவச்ச நேசமும்
கோடுபோட்ட இதயமும்
கோத்திரமா உனக்கான கோத்திரமா?

கொண்டாட்டம் உயிர் பந்தாட்டம்
நெஞ்ஜோரம் அவள் மின்னோட்டம்
கள்ளாட்டம் அவள் கண்ணோட்டம்
மர்மமான அன்பே சூதாட்டம்

உத்தரவாதம் நான் தாறேன்
பத்திரமா...
என் உயிறே உன்னில் எழுதிவச்சேன் ஆதனமா...
கற்பனை கடலே நீயும்
மிதவை யாக நானும்
உன்னில் கரைசேறுவேனா?
உன்னில் மடிவேனா?

மேலும்

இஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2019 4:45 pm

"வழமை என்னில் புதைக்கப்பட
புதுமை என்னில் பூக்கிறது...."
"ஆன்மீக நகர்வுகளின் நிகழ்வுகளில்
மூச்சுக்களின் சப்தம் ஏதோ கூறவருகிறது"
"தனிமையான காட்டுக்குள்
தனிக் கலவரமான சிந்தனைகள்"
"நீட்சியான மொளனத்தில்
நீன்டு செல்லும் பேரலைகள்"
"இதழுக்கு பசி ஏற்பட்டாலே
உண்ணப்படும் வார்த்தைகள்" "இடையினமான வெளிப்பாடும்
மெல்லினமான நிலைப்பாடும்.."
"அண்டசராசரம் சராசரியாக
என்னில் வலம் வரும் மாற்ற யுக்திகள்"
"வாழ்க்கையின் அந்தரங்கம் கசிய
ஆன்மீகக் கதவு இலேசாக வழி திறக்க"
"மனப்பரியயஞானம் விதை விட
ஆன்மீக பயணம் விடையாகிறது"
"விடை கிடைத்துவிட்டது வினாக்களை
தேடியவனாக.....................

மேலும்

இஷான் - Yuvatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2019 11:49 am

என் உணர்வுகளின் இலக்கியமே.....
என்னில் பூத்த காதல் கவிஅமுதே.....

மாதம் பத்து சுமந்தாலே தாய்மை எனும் உலகம்
நானோ இங்கு உன் நினைவுகளை சுமக்கும் தாயும் ஆனேன்......

என் உணர்வுகள் அனைத்திற்கும் நீயே கருவாக......
நானும் இங்கு தாயுமானேன்........

கார்மேகக் கண்ணன் களிப்பெடுக்க...
வானமகள் வண்ணக்கோலமிட்டு
காவிரியும் இங்கு காதல் கொண்டால்
மண்ணின் மனம் கொண்டு முத்துகுளிக்க.......

அதுபோலத்தான் எந்தன் காதலும்
உந்தன் நினைவுகள் என்னில் முத்துக்குளித்திடவே....
எந்தன் உணர்வுகள் உன்னை கருவாக என்நெஞ்சில் சுமக்கிறது.......

விந்தும் இல்லா விந்தையாக...
என்னில் உதித்த காதல் கருவே......

மேலும்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே....... 23-May-2019 10:58 am
மிகவும் அருமை... 23-May-2019 6:51 am
இஷான் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2019 12:48 am

நீரோடும் வைகையிலே நீரு மில்லை
நீள்விழியாள் நெஞ்சத்தில் நேச மில்லை !
காரோடும் வான்வெளியில் காரு மில்லை
காரிகையின் கவின்சிரிப்பில் கனிவு மில்லை !
ஏரோடும் வயலினிலே ஏரு மில்லை
ஏந்திழையாள் இதழ்களிலே ஈர மில்லை !
தேரோடும் வீதியிலே தேரு மில்லை
தேன்மொழியாள் வார்த்தைகளில் தேனு மில்லை !!

பாலைவன மானதடா பாவை யுள்ளம்
பசுமையான நினைவுகளி லில்லை கள்ளம் !
சோலையிலே மதுமலரைத் தென்றல் மோதும்
சுட்டதுபோல் மலரதுவும் உதிர்ந்தே போகும் !
காலையெழும் இளங்கதிரும் கனலைக் கக்கும்
கன்னத்தில் நீருருள வார்த்தைத் திக்கும் !
ஓலைவரும் நாளதனை எண்ணிப் பார்க்கும்
உடைந்

மேலும்

கவிதையின் நடை அருமை... 23-May-2019 6:48 am
இஷான் - சுரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2019 1:52 am

இணுக்குவதெல்லாம்
காம்பிற்கு
தெறியுமா?
மலர்ககளுக்குதான்
வலிக்குமா..?
சிரித்து கொண்டே
மாலைகளில்....
இமையத்தில்
உறைந்த மழைபோல்
இதயத்தில்
நிறைந்தாய்...
உன் இதழ்
விறிப்புகளும்
எனை நோக்கிய
இமைக்கா நொடிகளும்...
காற்று விலக்கிய
ஆடையின்
இடையில்
இடையும் தான்....
காதல்..
காதலா...?
காதல் மட்டுமா?

மேலும்

அருமை... 23-May-2019 6:46 am
இஷான் - இஷான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2019 1:17 pm

"கற்பனை காட்டிலே என் உள்ளம் தேடல் மரமாக கிடக்க
வேருக்கு நீர் ஊற்ற தயாராகிறது சிந்தனைகள்...."
"கற்பனை காட்டிலே அணிகளும்,மொழிவளங்களும்
புதைந்து கிடக்க
பிடுங்கி எடுத்து கொண்டு வந்து இதோ! நடுகிறது எண்ணங்கள்"
"கற்பனை காட்டிலே பழங்களாக பழுத்து குலுங்கும் ஓசைநயத்தையும்,இலக்கண வளத்தையும் பறித்து கொண்டு வருகிறது உணர்வுகள்"
"கற்பனை காட்டிலே சிரு கிளைகளாக வளர்ந்து கிடக்கும் பொய்களையும்,மெய்களையும் வெட்டி கொண்டு வந்து சேர்கிறது அனுபவங்கள்"
"கற்பனை காட்டிலே ஆழமரமாக வளர்ந்து
கிடக்கும் உலக நடப்பை அண்ணார்ந்து பார்த்து விட்டு நடக்கிறது அனுதாபங்கள்.."

மேலும்

நன்றி உறவே... 06-May-2019 3:43 pm
அடடா அழகு! கற்பனைக்காடு இன்னும் பறந்து விரியட்டும்! 06-May-2019 1:42 pm
இஷான் - இஷான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2019 11:57 am

"தீர்ந்து போன பொழுதுகளும்
தீராத நினைவுகளும்"
"தொலைந்து போன இரவுகளும்
வரண்டு போன காலங்களும்"
"மருகிப் போன எண்ணங்களும்
கனவாகிப் போன நிதர்சனங்களும்"
"உதடு பூமியில் போடும் நாடகமும்
வெளிவராத வார்த்தைகளும்"
ஆன்மாவை ஆட்டம் காட்டும் துன்பங்களும்
ஆன்மாவை நகர்த்திடும் இன்பங்களும்"
"கருக்கொள்ளாத வாழ்க்கையும் களைய துடிக்கும் உயிரும்..."

மேலும்

எல்லாமும் நகர்ந்து போகும்! 06-May-2019 1:44 pm
மேலும்...
கருத்துகள்
மேலே