தேநீர் ☕

தேநீரின் மடியில்
இரவு இசைக்கப்படுகிறது..
உறங்கும் உணர்வுகள்
கிள்ளி எழுப்பப்படுகிறது...

இஞ்சியின் இதழ்கள்
என்னை கொஞ்ச...
சுவாச பலகைகள்
துண்டு துண்டாக உடைகிறது...

புகைகள் எல்லாம் என்னில்
புன்னகை வாசமாக மேய..
நினைவின் பண்டங்களை
உள்ளம் உண்ண தயாராகிறது...

(ஆஹா... )
ஒவ்வொரு சொட்டும்
இரத்தத்தின் மயிர்களை வருடிவிட்டு
இயற்கையை சுழலவிட்டு
தாலாட்டி விடுகிறது....
(இஷான்)

எழுதியவர் : இஷான் (8-Jan-20, 1:46 pm)
பார்வை : 301

மேலே