தாய் எனக்களித்த முகவரி

பத்து மாதம் சுமந்து பின்
ஈன்றெடுத்தாள் என்னை
என் அன்னை - இவர்தானடா
உன் தந்தை என்று என்
தந்தை இடமே என்னை
அறிமுகப் படுத்தியவள்
அன்று விநாயகனுக்கு
அன்னை பார்வதி அவன் தந்தை
சிவனாருக்கு இவர்தான் உன் தந்தையடா
என்றாப்போல்- இப்போது எனக்கு
புரிகிறது என் அன்னையின்
அந்த அறிமுகம் எத்தனை
முக்கியம் வாய்ந்தது என்று
அது என் வாழ்க்கைக்கே முகவரி
இன்று முகவரி இல்லாது வாழ்தல்
மிக்க கடினமே அல்லவா

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (8-Jan-20, 7:59 pm)
பார்வை : 111

மேலே