வான்மழை நமக்கு வழித்துணை அரணே

கவிதை - பெண்மையின் மேன்மை !!

வான்மழை நமக்கு வழித்துணை அரணே !!

வேலைச் சுமையை
விரித்துத் தொகுத்து
விரைவாய் முடித்து
வீட்டை நோக்கி,
வில்லில் லம்பாய்
விரையும் போதில்,
விழியை வழிமேல்
வீசித் தினமும்,
வெந்தவ மிருக்கும்
விழியா மனைவி,
விதையாம் மழலை,
விழுதா யுன்னை
விரும்புந் தந்தை,
விதையில் ஆலை
விளைத்த அன்னை,
விரியிதழ் முறுவல்
வீசிடுந் தமக்கை,
விசிறிக் காற்றாய்
வருடுந் தங்கை,
வீட்டில் முகிழ்த்து
விரியும் பாசம்,
வான்மழை, நமக்கு
வழித்துணை, அரணே!
------ சித்திரைச் சந்திரன்.- சந்திர மௌலீஸ்வரன் மகி.
08 ஜனவரி 2929-புதன் கிழமை.

வழித்துணையின் உயிர் ஓவியம்,
திரு.இளைய ராஜா - எஸ்

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (8-Jan-20, 11:12 pm)
பார்வை : 85

மேலே