சந்திர மௌலீஸ்வரன்-மகி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சந்திர மௌலீஸ்வரன்-மகி |
இடம் | : பெரிய குமார பாளையம், |
பிறந்த தேதி | : 01-Jan-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 771 |
புள்ளி | : 115 |
சந்திர மௌலீஸ்வரன்.மகி. மின்னணுவியல், கணினியியல், இயந்திரவியல் ஆகியவற்றில் பட்டதாரி. இயற்கை வேளாண்மை அறக்கட்டளை நிறுவனர்-அறங்காவலர். அழகுத் தமிழ் மரபுக் கவிதை ஆர்வலர். தொழில்-இயற்கை வேளாண்மை. துணைத்தொழில்-ஆசிரியர்-(ஆவாஸ்) - ஆஸ்ட்ரா வாழ்வியல் கல்வி நிறுவனம்.
முகம் காட்டாத மெய்க்காவல் படை - சோழர்களின் மெய்க்காவல் ஒற்றர்கள்.
எங்களுடைய பணியில் அறிமுகமாக ஒரு முன்னாள் விமானப் படை மேஜர் எழுதிய "முகம் காட்டாத படை" என்னும் யூட்யூப் காணொளிக்கான எழுதப் பட்ட கருத்துரை.
*****************************************************************************************************************
நாங்கள் மிகவும் எதிர்பாத்திருந்த மிகவும் அருமையான தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்!
மனமார்ந்த பாராட்டுக்கள்!!
நீங்கள் குறிப்பிடும் "முகம் காட்டாத பின்னணி (ஆனால் முன்னணியில் எப்போதும் செயலாற்றும்)ப் படை" பெறும் மிகக்குறைந்த அளவிலான வெளிப்பாடு கூடத் துளியும் இல்லாத, இரு
""" தொண்டைக்குக் கீழே போன பின்னால்! """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
( இக்கதை கடந்த 1970 களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு பெரும்புகழ் பெற்ற சொற்பொழிவாளர், சமயச் சொற்பொழிவாளர் சொன்ன உண்மைக் கருத்தின் அடிப்படையில் உருவான கதை. அவர் ஒரு முறை, அசைவ உணவு சமைக்கும் வீடுகளில் அதற்காகத் தனிச் சமையல் அறை, தனிப் பாத்திரங்கள், தனிக் கருவிகள், தனி அடுப்பு என்று வைத்திருப்பதைத் கிண்டலாகக் குறிப்பிட்டு, "தொண்டைக்குழிக்குக் கீழே போனபின் அவை என்ன சைவ உணவு அசைவ உணவு என்று பிரிந்தா இரண்டு இரைப் பைகளில் விழுகின்றன? தொண்டைக்குக் கீழே போனபின் சைவமாவது அசைவமாவது எல் - ல் -
""" மிகவும் சுலபமான குடும்பக் கட்டுப்பாடு! """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
ஆப்பிரிக்கா. ஆமஃஜான் காடு. ஒரு நதிக்கரை ஓரமாக இருந்த ஒரு சிறிய குக் குக் குக்கிராமத்தில் ஊர்க்கூட்டம். மாட்டிவிகளின் கொலபாயோ கிராமம். ஊர் மைதானம். ஷிக்காரி தொப்பி அரை டவுசர் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். அவர்கள் எல்லாரும் சொல்லிவைத்த மாதிரி, ஒரு அர்ரதல் ஜீப்பின் பின்பக்கத்தில் அமைத்திருந்த டீக்கடை பெஞ்ச் மேடையில் "கட்டியிருக்கும் இந்த நார்க்கயிறு தாங்குமா?" என்று அங்கேயே பார்த்துக் கொண்டு அச்சத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை விட அந்த ஜீப் டிரைவருக்கு ஒரு பெரிய அ
""" தொழிலிற்குப் பொருத்தமான இருப்பிடம்! """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
ஆளுங்கட்சி அமைச்சர் - ஆட்டையாம்பட்டி.
வாஷின் மெஷின் உற்பத்தியாளர் - வாஷிங்டன்.
வாஷிங் பௌடர் உற்பத்தியாளர் - வாஷிங்டன்.
நேஷனல் ரிங் சர்க்கஸ் நிறுவனர் - சிங்கப்பூர்.
வங்கிக் காசாளர் - காஷ்மீர்.
பாம்பாட்டி- - நாக்பூர்.
ஆள்துளைக் கிணறு அமைப்பவர் - போர்பந்தர்.
ராணுவ அதிகாரி - போர்பந்தர்,
வெங்காய வியாபாரி - பெல்லாரி.
மேம்பாலக் கட்டுமான நிறுவனர் - பாலமேடு.
பாக்கு உற்பத்தியாள
மங்கல தீபம் வரிசையில் ஏற்றுவர்
திங்களெழில் மங்கையர் கார்த்திகை வீதியில்
குங்குமம் நெற்றி தனில்துலங்க தீபங்கள்
சங்கமப் பேரெழில் பார்
----இன்னிசை வெண்பா
மங்கலநற் தீபங்கள் வரிசையிலே ஏற்றுவார்கள்
திங்களெழில் மங்கையர்கள் கார்த்திகைப்பொன் வீதியிலே
குங்குமம்நல் லெழில்நெற்றி தனில்துலங்க தீபங்கள்
சங்கமத்தின் பேரெழில்பார் கார்த்திகைநன் நாளினிலே
-----கலிவிருத்தம் ---நற்காய் நான்கு எதுகை மோனை
மோனைக்கு முட்டியே மோதிடும் பாழ்நெஞ்சே
ஆனைக்கா அற்புதன் அப்புநாமம் போதுமே
தேனைப் பிழிகொன்றைத் தார்மார்பன் அந்தயிளம்
மானைச்சேர் வானை நினை
----இன்னிசை வெண்பா
மோனைக்கு முட்டிமுட்டி மோதுகின்ற பாழ்நெஞ்சே
ஆனைக்கா அற்புதனாம் அப்புநாமம் போதாதோ
தேனைச்சிந் தும்கொன்றைத் தார்மார்பன் அந்தயிளம்
மானைச்சேர் வானைநீயும் நினைத்திடுவாய் நித்தமுமே
---எத்துணை மோனையுடன் முற்றிலும் காய்ச்சீரால்
அமைந்த கலிவிருத்தம்
காதல்
*******
பெற்றோர் பேச்சைக் கேட்காதல்
பிழையா சரியா பார்க்காதல்
கற்றோர் வழிநின் றொழுகாதல்
கற்கச் சொன்னால் பிடிக்காதல்
உற்றார் உறவை மதிக்காதல்
உயரும் எண்ணம் வளர்க்காதல்
முற்றும் திருந்த நினைக்காதல்
முடிவாய் எதையும் ஏற்காதல்
*
கூடா நண்பர் தவிர்க்காதல்
குடியும் புகையும் மறக்காதல்
ஆடா திருக்க ஆகாதல்
அவமா னத்தை துடைக்காதல்
காடாம் தாடி மழிக்காதல்
கவனக் குறைவை தடுக்காதல்
தேடாத் தீமை வெறுக்காதல்
திமிராய்த் திரிய மறுக்காதல்
*
நகத்தைக் கூட நறுக்காதல்
நாளைக் கென்று ஒதுக்காதல்
முகநூல் மூடி வைக்காதல்
முடியை அளவாய் குறைக்காதல்
அகந்தை தன்னை நீக்காதல்
அழுக்குத் த
காலம் தரும் செண்டு
======================
வறுமையெனும் சுமைகடந்து
விடுவதற்கே நாளும் - தினம்
வருங்கனவு நீளும் - ஒரு
வசந்தமென ஆளும் - அதை
வாழ்க்கையென நம்பிவிடின்
வறட்சிநிலை சூழும்
*
பொறுமையுடன் திட்டமிட்டுப்
புதுவாழ்வைத் தேடும் - சிலர்
புயலெதிர்க்கப் போடும் - பெரும்
போராட்டம் நாடும் - ஒரு
பொன்விடியல் தனைக்காட்டிப்
பூமாலை சூடும்
*
வாழ்வினிலே ஏற்றமதை
வரவழைக்க வென்று - பல
வழிகளிலே சென்று - பலர்
வாசலிலே நின்று - ஒரு
வசந்தமதைக் காண்பதற்கே
வதைபடுவா ருண்டு
*
ஆழ்கடலில் முத்தெடுக்க
ஆசைகொளல் போன்று - பெறும்
ஆர்ப்பரிப்பு தோன்றும் - அது
ஆழமாய்வே ரூன்றும் - தினம்
அலைமீதினில் படகா
=============================
மார்கழியாள் பூம்பனியால் மாலைகட்டிச் சென்றதனால்
*மங்கை தை சூடிடவே மலர்ப்பாதம் வைக்கின்றாள்
கூர்விழியாம் கதிரென்னும் கொழுந்தனாரின் பார்வையிலே
-குளுகுளுன்னு நாணமுற குறுநகையும் பூக்கின்றாள்
மார்பினிலே பசுமைதனை மாராப்பாய் போட்டபடி
-மாங்கனியும் தேன்சுவையும் மனசாரத் தருகின்றாள்
ஏர்பிடித்த உழவனுக்கு இன்பமென்னும் செல்வத்தை
-இதயத்தின் வாசலிலே எடுத்திங்கே வருகின்றாள்
**
வருமவளை பொங்கலிட்டு வரவேற்கும்
எழுத்து உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள்
புது புது கனவுகள்
கனவினை கான,
சிறகுகள் விரித்தேன் !!
சிறகுகள் மிதக்க,
இலக்குகள் புலர்ந்தது !!
இலக்கினை எட்ட,
படபடத்த சிறகுகள் !!
தளர்வினை கொண்டு,
தனிந்தது கீழே !!
சிறகுகள் அகல,
தடைகள் உடைந்தது !!
முயற்சிகள் வெல்ல,
உயர்ந்தது மேலே !!
எல்லையை எட்டிட,
மகிழ்ச்சியில் மிதந்தது!!
மகிழ்ச்சியின் நீட்சியில்,
பிறந்தது புதுக் கனவு!!!
உங்கள்
தௌபீஃக்
====================
அறிவற்ற வர்கள் அரிகின்றக் காட்டைச்
செறிவுள்ள தாக்கிச் சிற.71
*
சிறப்பெல்லா முண்மைச் சிறப்பன்று பூமி
வறட்சியில் வாடும் பொழுது.72
*
பொழுது புலர்ந்து புவிமாந்தர் நாளும்
தொழுமியற்கை நீக்கும் துயர்.73
*
துயரற்ற வாழ்வு தொடர்ந்தென்றும் வாழ
பயனுள்ள வற்றைப் படை.74
*
படைத்திட்ட தெய்வம் பிரமித்து நிற்கத்
துடைத்திடு வான்கொண்ட மாசு.75
*
மாசற்றக் காற்றை மரமிங்கு தந்தாலே
நாசங்கள் இல்லை நமக்கு.76
*
நமக்கியற்கை வள்ளலென நல்கிய வற்றை
அவமதித் தலில்லை அறம்.77
*
அறமென்ப தொன்றை அறிவிக்கத் தானே
மரமீ யுதிங்கு மகிழ்ந்து.78
*
மகிழ்ந்தீயும் காட்டு மரம்போல விண
=========================
முத்துக்கள் தந்தெம்மை மகிழ்ச்சிக் குள்ளே
மூழ்கவிட்டக் கடலன்று முகத்தை மாற்றிச்
சொத்துசுக மேதுமற்றுச் சொந்த மற்றுச்
சூனியமா யாக்கியனா தையெனுந் துன்ப
வித்துக்கள் விதைத்திங்கு விட்ட நாளை
விதியெனவே கடப்பதற்குள் விரைந்த போதும்
கத்துகின்ற உள்மனது கற்ற பாடம்
கல்மேலே எழுத்தானக் கதைபோல் நிற்கும்
**
மெய்யன் நடராஜ்