அந்தயிளம் மானைச்சேர் வானை நினை
மோனைக்கு முட்டியே மோதிடும் பாழ்நெஞ்சே
ஆனைக்கா அற்புதன் அப்புநாமம் போதுமே
தேனைப் பிழிகொன்றைத் தார்மார்பன் அந்தயிளம்
மானைச்சேர் வானை நினை
----இன்னிசை வெண்பா
மோனைக்கு முட்டிமுட்டி மோதுகின்ற பாழ்நெஞ்சே
ஆனைக்கா அற்புதனாம் அப்புநாமம் போதாதோ
தேனைச்சிந் தும்கொன்றைத் தார்மார்பன் அந்தயிளம்
மானைச்சேர் வானைநீயும் நினைத்திடுவாய் நித்தமுமே
---எத்துணை மோனையுடன் முற்றிலும் காய்ச்சீரால்
அமைந்த கலிவிருத்தம்