கோலமயில் தேவியவள் சிவகாமி யோடாடி

ஆலகால நஞ்சை அருந்துவான் நீலகண்டன்
கோலா கலமாகக் கூத்தாடு வான்சபையில்
நந்தியின் கொம்பிடையே நற்தாண்ட வம்புரிவான்
சிந்திநீல னைமுப்போ தும்

ஆலகால நஞ்சினையே அருந்திடுவான் நீலகண்டன்
கோலமயில் தேவியவள் சிவகாமி யோடாடி
ஆலாசான் நந்திமேலும் அற்புதமாய் ஆடிடுவான்
காலநெருப் பன்குளிர்தாள் பணிந்திடுவாய் கடைத்தேற

---எதுகை மோனைப் பொலிவுடன் காய் காய் காய் காய்
எனும் ஒரே வாய்ப்பாடு அடிதோறும் பயின்று வர
நாற்சீர் நாலடியால் அமைந்த இறைத்துதி கலிவிருத்தம்

மேலே வெண்பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-23, 9:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே