குங்குமச் செஞ்சிமிழ் பேழையில் முத்துதிர்ந்து

குங்குமச் செஞ்சிமிழ் பேழையில் முத்துதிர்ந்து
திங்கள் திருமுகத்தில் புன்னகை சிந்திட
தங்கச்செம் மேனிகாஞ் சிப்பட்டில் மின்னவந்தாய்
மங்கைமாலை ஓவிய மாய்

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-24, 4:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே