தஞ்சைலிங்கம்
தஞ்சைலிங்கம்
@@##@##
கட்சித் தலைவரிடம்: ஐயா உங்களைப்
பார்க்க ஒரு இளைஞர் வந்திருக்கிறார்.
@@@@@
அவரை வரச்சொல்.
@@@@@@
வணக்கம் ஐயா.
@@@@@
உம். வணக்கம். தம்பி நீ அந்த ------ கட்சித்
செய்தித் தொடர்பாளராக இருக்கிறாய்
இல்லையா? உனக்கு என்ன
வேண்டும்?
@@@#@#
ஐயா அந்தக் கட்சில சம்பளம் குறைவாகக்
குடுக்கறாங்க. எதையும் ஆதாரத்தோடு
விவாதிக்கணும்னு சொல்லறாங்க.
அதுக்குத்தான் உங்க கட்சில வாய்ப்பு
கேட்டு வந்திருக்கிறேன்.
@@@@@@#
மிக்க மகிழ்ச்சி. எங்க கட்சி கொள்கையை
பத்தி....
@@@@@
எனக்கு நெறையாத் தெரியுமுங்க ஐயா.
பொய் தகவல்களைச் சொல்லி பொய்யான
ஆதாரங்களைக் காட்டணும். மற்ற
கட்சி செய்தித் தொடர்பாளர்களைப்
பேசவிடமா
இடையூறு செய்து கொண்டே இருக்கணும்.
இன்னும் நெறைய விசயங்கள். உங்கள்
பொன்னான நேரத்தை வீணடிக்க
விரும்பவில்லை.
@@@@@@@
சரி. சரி. உன் பெயர் லிங்கம். வெறும்
லிங்கம் சரிப்படாது. நீ எந்த ஊர்?
@@@#@
தஞ்சாவூருங்க ஐயா.
@@@@@@
இன்னில இருந்து நீ 'தஞ்சைலிங்கம்'.
உனக்கு தங்கும் வசதி உணவு எல்லாம்
எங்க கட்சி பார்த்துக்கும். உன் திறமை
பற்றி உலகமே அறியும். மாதம் இரண்டு
இலட்சம். மகிழுந்து (கார்) ஒண்ணு
உனக்காக ஒதுக்கப்படும். ஒரு நாளைக்கு
நீ மூணு தொலைக்காட்சி விவாதங்களில்
கலந்து கலக்கி விடணும். டேய் ஐயப்பா
இங்க வாடா.
@@@@@@@
என்னங்க ஐயா?
@@@#@@
நம்ம கட்சி செய்தித் தொடர்பாளர்
குடியிருப்புக்கு அழைச்சிட்டு போ. அங்க
ஒரு குளிர்சாதன அறையை ஒதுக்கி விட்டு.
அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும்
கவனிக்கச் சொல்லி மேலாளர்
மாணிக்கமணிகிட்டச் சொல்லிட்டு வா.