காதலில் தெய்வீகம்

முதல் பார்வையில் அவள் யாரோ எனத் தெரிந்த அவனுக்கு காதல் பிறந்து காலம் நகர நகர மனதிலே இனம் புரியாத நினைவலைகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது என்பதை அவன் நன்கு அறிந்தவனாய் தெரிகிறான்

காதலுக்கு முன் அவன் அவளிடம் பேசிய அத்தனையும் தெய்வீகமாய் அவள் நினைவாகி நல்ல ஓட்டத்தை பெற்று தருகிறது என்கிறான்

காதல் வந்த பிறகு அவன் முன் போல அவளிடம் பேசுவதும் இல்லை அவளை பார்ப்பதும் இல்லை ஆனால் அவள் அருகிலே உள்ள அவன் அவளுக்காக அவள் வீட்டில் தனக்கு தெரிந்த பணிவிடைகளை புரிகிறான்

தெய்வீக காதல் காமத்திருக்காக பிறப்பது இல்லை இறை நாமத்தை மட்டுமே பழகி சேவையை உருவாக்கும் இவ்வகைக் காதல் நன்மக்களுக்கான சொத்து எனலாம்

காமத்தை துணைக்கொண்டு வரும் காதல் உடலை குறி பார்த்து மனத்தை வீணாக்கி விடும் ஆனால்

பெண்ணுக்கு நம்பிக்கை விதைக்க அன்பை மூட்டி சேவையாற்ற வரும் காதல்
மனதையும் அதன் உணர்வுகளை மட்டுமே குறி பார்க்கும்

எப்படி இருந்தாலும் அவன் அவளுக்கு இத்தகைய தெய்வீகம் உள்ள காதலையே தந்து கொண்டிருக்கிறான்

என்று அவளுக்கு அவன் காதல் புரிகிறதோ அன்றைக்குத் தான் தெரியும் தொடரும்....

எழுதியவர் : சி. எம். ஜேசு (5-Oct-24, 3:06 pm)
பார்வை : 80

மேலே