சேவையாற்றும் காதல்

அவனுக்கு வயது அதிகம் தான் ஆனாலும் இளமை தோற்றத்தில் தோல்வி இல்லா துணையோடும் துள்ளும் மகனுடனும் வாழ்கிறான் இந்த வாழ்க்கையில் பணத்தை தவிர மற்ற மொத்த உலகமும் அவனுக்குள் அடங்கி இருப்பதை காண முடியும்

என்ன பிரச்னை என்றால்
அடிக்கடி ஏதோ ஒரு வகை காதலுள் நுழைந்து அதை ரசித்துக்கொண்டிருப்பான்

இப்போது இசை மீது அவனது காதல் அழகிய பொருள் தேடலாய் அமைந்து விட்டது பொருளும் தேடுகிறான் கூடவே காதலையும் தேடுகிறான் காதலிக்கும் சூழ்நிலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை

கலைகளுக்குள் வாழ்பவர்கள் கற்பனைகளுக்குள் வாழ்பவர்கள் என யாராக இருந்தாலும் இந்த காதல் பிறக்கும் ஆனால் இவன் காதல் முடியா காதல் முழுமையான ஈடுபாடு உள்ளக் காதல்

தன்னை அவள் நேசிக்கிறாளோ இல்லையோ இவன் நேசிக்க ஆரம்பித்து விட்டான் அதனால் அவளிடத்தில் அவள் சூழலில் நன்மைகளின் சுழற்சி ஆகிறான்

பணி சிறக்க வேண்டுமா அங்கே காதல் பிறக்க வேண்டும் செயல் அழகு பெற வேண்டுமா அதிலே காதல் இருந்தாக வேண்டும் ஆக இந்த வகை காதல் காமமற்று
இறை நாமத்தை உச்சரிக்கும் மந்திரம் என்பதில் ஐயமில்லை

என்றைக்கு காதல் இருவருக்கும் பிறக்கிறதோ அன்றைக்கு தான் தெரியும் அதன் அழகியல் சொர்க்கம்
தொடரும்...

எழுதியவர் : சி. எம். ஜேசு (8-Oct-24, 8:38 am)
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே