சி எம் ஜேசு பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சி எம் ஜேசு பிரகாஷ்
இடம்:  வேளச்சேரி - சென்னை
பிறந்த தேதி :  23-Dec-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2013
பார்த்தவர்கள்:  1009
புள்ளி:  213

என்னைப் பற்றி...

இசை ஆசிரியர்
இசைக் கலைமணி
இசையமைப்பாளர் எழுத்தாளர் ,புத்தக ஆசிரியர் என பல பரிமாணங்கள் என்னில் பல தோல்விகள் , பல சோதனைகள் என நான் கடந்த பாதை மிகவும் கடினமானது எனவே என் எழுத்துக்கு உயிர் உண்டு என்பதை நிருபிக்க எழுத்து .காம் துணை கிடைத்தது

இனி என் கடந்த கால அனுபவ கவிகள் நிகழ்கால அனுபவ கவிகள், எதிகால கவிகள் என என் எழுத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு என்னை மகிழ்வு படுத்திக் கொள்கிறேன்
கிராம வாழ்வின் அனுபவங்கள் எனக்கு சிறுவயதில் ஜந்துவருடங்கள் உருண்டோடின, அதன் பின் சென்னையில் மூன்று பள்ளிகளில் கல்வி அனுபவம் பெற்றேன் பின்பு இசைக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இசைக்கலைமணி இசை ஆசிரியர் படிப்பு ஓராண்டு அதனோடு பி.ஏ. இந்தியன் மியூசிக் எனத் தொடர்ந்த இசைப் படிப்பு பின்பு சுயத் தொழிலாக மாறி இன்றுவரை இயங்கிக்கொண்டு இருக்கிறேன் . rn

சிறு வயதில் இருந்தே சிறுகதை ,கவிதை எழுதின ஆர்வ மிகுதியால் என் ஆல்ப பாடல்களை நானே எழுத வித்திட்டது அதிலும் வாழ்வின் அனுபவங்கள் மிகுதியாக இருக்கும் இதுவரை 10 ஆல்பங்களுக்கு இயல் ,எழுதி இசை அமைத்து இருக்கிறேன்

தரமான தளங்கள் இருப்பதனால் அதிலே இயல் ,இசை ஆல்பங்களை பகிர்கிறேன் நன்றி தோழர்களே ! எல்லோரும் மகிழ்ந்து மக்களை கவர்ந்து நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் வலு சேர்ப்போம்rnவணக்கங்கள் கோடி!! . இனி என்றும் உங்களுடன் சி.எம்.ஜேசு

என் ஆல்பங்களின் தலைப்புகள்
1.கரங்களில் திருப்பலி ஸ்வரங்கள் (இசை புத்தகம் )
2.கல்வாரி
3.கல்வாரி (v c d )
4.ஜெபமாலை
5.இயேசுவே இயேசுவே
6.இயேசுவே இயேசுவே ( v .c .d )
7.புகழ்வோம் புனிதத்தை
8.அன்னையின் நினைவலைகள் (ஒரு பாடல் மட்டும் )
9.புஜ்ஜி புஜ்ஜி ( ஒரு பாடல் மட்டும் )
10.யேசு பிறந்திருக்குறாரே - என்று தலைப்புகள் தாங்கிய ஆல்பங்கள் .

ஜேசு 53 from 1971 - சி எம் ஜேசு

யுகத்தில் மலர்ந்தேன் கருவறை நின்று
முகத்தில் மகிழ்வை பெற்றோருக்கு தந்து

செஞ்சி பக்கம் சிறிதோர் கிராமம்
பஞ்சு மனசுள்ள தாய் தந்தைக்கு மகனாக

கிராமம் விட்டு நகரம் நகர்ந்தேன்
பட்டினப்பாக்கம் கடலோர வாழ்க்கை

கூலி வேலை தான் குழமி வாழ்ந்தோம் என
கூவி காதிலே உழைப்பை வளர்த்தாள் என் தாய்

ஆண்டவன் எனக்கு அன்றே தெரிந்தார்
உயர்ந்து நின்ற சாந்தோம் ஆலயம் பார்த்தேன்

வேலை வந்தது தந்தை கிராமம் செல்ல
வேண்டிய காலங்கள் அங்கே வாழ்க்கை நகர்ந்தது

மண்ணை ருசித்தேன் விண்ணை ரசித்தேன்
என்னைச் சுமந்த அன்னையின் சொல்கேட்பேன்

காலங்கள் சென்று 80 துக்கு வந்தது மீண்டும்
சென்னைக்கு என்னை அழைத்தார்கள்

தொடர்ந்தது கல்வி நான்கு முதல் எட்டு வகுப்புகள்
சென்னை சின்னமலை புனித சவேரியார் பள்ளி

இரண்டு வகுப்புகள் ஒன்பது பத்து
எழுச்சியை தந்தது சென்னை ஒ .எம் .சி.ஏ பள்ளி

பத்திலே புத்தி குறைந்து போனது
புற்றிலே புதையுண்டதைப் போலானேன்

தேர்வுகள் வரும்போதெல்லாம் தேடிசென்றேழுதுவேன்
சோதனைகள் தான் மிஞ்சும் சொல்லடிகளும் கூடும்

வாடிய முகத்துடன் தேடுவேன் வேலைகள்
மீண்டும் முடிந்தவரை படிக்கலாம் என்று தோன்றும்

முயற்சித்தேன் முடிந்தவரை முடித்தேன் தேர்வுகளை
இணைந்தேன் நந்தனம் அரசு பள்ளிதனில் 1990 - லே

சுற்றாடும் வணிகராக தந்தையும் சகோதரரும்
நான் கேட்பது யாவையும் தந்து வாழ்த்தினர்

முடித்தேன் 11 .12 முழுதும் தேராமல்
மீண்டும் மூலைக்குள் முடங்கியவனானேன்

ஆலயம் பணி புரிந்தேன் ஆண்டவனை தினம் கண்டேன்
கலைகளையும் வேலைகளையும் கற்க வழி பிறந்தது

இசைகல்லூரிக்கு சென்றேன் இசைக்கலைமணி வென்றேன்
இதயம் மகிழும் வேலை இதுதான் என்றறிந்தேன்

அடுத்தொரு படிப்பேனும் இசையாசிரியர் பயிற்சி
முடியாமல் தோற்று மீண்டும் வேன்றேடுதேன்

வாடாமல் ஓடி இணைந்தேன் இந்திய இசை
இயக்கம் குறைந்தது சான்றிதழை வாங்கி விட்டேன்

படிக்கும் காலங்களில் வீடுகளில் இசை கற்பித்தேன்
அதுவே தொழிலாகி தொடர்கிறேன் இன்று வரை

கவிதைக்கு மயங்கினேன் வார்த்தைகளை வார்தேடுத்தேன்
கற்பனைகள் இல்லாமல் அனுபவங்களை ஆல்பங்களாக்கினேன்

சொந்தமான தந்தை சொர்க்கத்திற்கு செல்லும் நேரம்
கடமைகள் தவறாமல் உழைப்பை அதிக படித்தினேன் 1999-இல்

ஊதியம் வந்தது உறுதுணையான மாணவர்களுடன்
கவலை வரும்போது கைபிடித்த பெற்றோர்களை நினைவு கூர்கிறேன்

அரசியல் இல்லாமல் மதபேதம் பார்க்காமல்
இசையை மட்டும் இறைவனாகப் பார்த்து இயன்றதை செய்கிறேன்

காதலை விட்டேன் மோதலை தவிர்க்க - என் குடும்பம்
நல்ல மனைவியை எனக்கு துணையாக்கியது 2006 -இல்

காலங்கள் செல்ல செல்ல இல்லத்தை உயர்த்தினோம்
உள்ளத்தை ஒன்றாக்கி ஒரே குடும்பமாய் வாழ்கிறோம்

வொவ்வொருவரும் வீட்டின் தூண்களாய் இருந்து கொண்டு
நாட்டிற்க்கு கெடுதல் இல்லாத நன்மையினை செய்கிறோம்

சுத்தங்கள் விரும்பி சத்தங்கள் இல்லாமல் சுகம் காண
அன்பின் வழி தேடி வாழ்வை பயணிக்கிறேன்

தோழர்களுக்கு துணையாகி அவர்களின் மனங்களுக்கு மருந்தாவேன்
உலகினின்று தனியாகி பூமியின் ஆற்றலை போற்றுவேன்

குழந்தை பேரு அற்று கண்கள் குளம் ஆக நல்ல
வளமும் நலமும் பெற்று என் மகன் கண்டேன் 2010 -இல்

உறவுகள் மறக்கவில்லை பிரிவுகள் ஆகிவிட்டது
நிறைவுகள் அடையாமல் அவர்களை நெருங்க மனமில்லை

சுற்றிருக்கும் தெரிந்தவர்கள் சுகம் கேட்கா சொந்தங்களாய் - நான்
பற்றியிருக்கும் இசையில் வாழ்பவர்களும் என் சொந்தங்களே

சாதனை என்று ஏதும் இல்லை சாதிப்பேன் என்றும் சொல்லவில்லை
நல்லவனாய் வாழ்ந்து மரிப்பதை நன்மையென உளம் வைத்துள்ளேன்

சிந்தனைகளை கட்டவிழ்த்துள்ளேன் சீர்மிகு உலகம் காண
சந்தைகளாய் வந்துதிக்கும் வலைதளங்களின் கலைக் களங்களிலே

உலகம் எனக்கு நிறைந்த இன்பம்
நான் தான் அதற்கு நிறைவில்லாத துன்பம்

கோவாவிற்கு பயணித்தேன் குடும்பத்தோடு
கோவில் கடற்கரைகள் கண்டு என் மனம் பதித்தேன்

கோவாவின் அழகும் அதன் பல கடற்கரைகளும்
மகிழ்ச்சியை தந்து என் வாழ்வில் எழுச்சியை உண்டாக்கியது

சிங்கப்பூர் சென்றேன் சீர்த்திருத்தங்கள் கண்டேன்
சிந்தை மகிழ்ந்த அந்நாட்களை என்றும் மறவேன்

அடுக்கி வைக்கப்பட்ட பெட்டிகளாக மேகத்தினை எட்டிப்பிடிக்கும்
கட்டிடங்களின் உயரங்கள் கண்டு வியப்படைந்தேன்

மலேசியா சென்றேன் மனங்களால் மகிழ்ந்தேன்
பசுமை பரப்பளவை கண்டு உள்ளம் பூரித்துப் போனேன்

அழகிய சாலைகள் அதன் இரு புறங்களும் வேலைப்பாடுகள்
கட்டுப்பாடுகளை கடமைகளாக பின்பற்றும் மக்களை கண்டேன்

விவிலிய பயணம் சென்றேன் இல்லத்தோடு - தெய்வீகத்தை
உள்ளதோடு நிறைத்து உலகை மறந்தேன்

சென்னையில் இருந்து மஸ்கட் - வான்வெளி பயணத்தில்
விமானத்திற்குள் பிஸ்கட் சாப்பிடுவதற்குள் வந்து விட்டது

சோதனைகளை கடந்து அடியெடுத்தோம் அழகிய கடைகள்
அதிசய பொருட்கள் என குவிந்திருந்த பொருட்கள் கண்டேன்

சின்ன ஓய்விற்குள் உள்நிறைத்தோம் சந்தோஷங்களை
படங்கள் பார்வைகளென பரபரப்பாக்கிய மஸ்கட் கடை வளாகத்தில்

மீண்டும் விறுவிறுவிப்பாகிய விமான பயணம்
கலையா துயில்களோடு கருத்தாய் இறக்கியது ஜோர்டானில்

பெட்டிகளை இழுத்துக்கொண்டு பொடி நடையாகி
உள் இணைந்தோம் வாகனத்திற்குள் தங்கும் விடுதி செல்ல

ஓய்வானோம் பழகா இடமான அழகிய அறைகளில்
பதிந்தேன் நினைவுகளை ஓய்வறியா உழைப்பாக்கினேன்

உணர்வுகள் சொன்னது உயர்ந்த புனிதங்கள் நிறைந்த இடங்கள் இது
இங்கே தயக்கமில்லாமல் இறையினை இயக்கமாக்கிய தருணங்கள் அதிகம்

ஓய்வெடுத்து உடைகளை மாற்றி மாற்றி அணிந்து வளம் வந்தேன்
கனவில் வாழ்வதை போல நிஜத்தில் நெகிழ்ந்தேன்

பாவங்களை எண்ணி உளம் வருந்தினேன்
பொய்களை புரட்டுகளை இருட்டுகளை அறிவின் குருட்டுகளை

நினைவில் நிற்க வைத்து நிஜமான உலகின் இறை வாழ்விடத்தில்
புனிதத்தை அறிவொளியால் மிளிர வைக்க உறுதி எடுத்தேன்

இவ்வாறாகி அருளிடங்களில் உழன்று சுழன்று ஜோர்டான்
ஜெருசலேம் ,பெத்லகேம்,இஸ்ரேல் ,பாலஸ்தீன், எகிப்து எனும்

உலக வரைபடத்தில் பார்த்தவர்களை உள்நின்று கண்ணுற்றேன்
வியந்து நின்று போற்றினேன் என்னையும் எழுத்தாக்கிய நன்மைக்காக

ஈடில்லா நன்மைகள் எனக்கே இயற்கையின் இன்பங்கள் என்றே
உணர்வில் நிறைத்தேன் நினைவுகளை பகிர்கிறேன் தயக்கமில்லாமல்

உருண்டோடும் காலங்களோடு உழைப்பும் உணர்வுமாகி நடக்கிறேன்
இதயங்கள் எழுச்சி காணும் நோக்கிலும் நன் முயற்சிக்கும்

இடையிடையே எழுகின்ற இல்லத்தின் பாடுகள்
குறுக்கும் நெடுக்குமாகும் மகிழ்வினால் மறைந்து போகின்றன

அனுபவங்களே என் இயக்கங்களுக்கான ஊன்று கோல் - காலத்தின்
அதிசயங்களே என் வாழ்க்கைக்கான திறவு கோல் என்றாலும்

கடன் மிகு உதவிகள் தென்றலாய் என்னை தாலாட்டுகிறது
கருத்தாய் அவைகளை நான் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதனாலே

ஆலய காணிக்கையாக வரும் சன்மானம் நான் இசை குருவென்பதால்
கோவில் தட்சணையாக வரும் சம்பளம் இசையினை கற்ப்பிப்பதால்

பணிகள் ஒவ்வொன்றிலும் பண்பை கலக்கின்றேன் - நான்
பார்வை ஒவ்வொன்றிலும் என் அன்பை விதைக்கின்றேன்

பிரச்சனைகள் என்றதெல்லாம் பனித்துளிகளானது
என் குடும்பம் குழுவாகி எனக்குதவிட பகலவனாய் ஆனது

வருமான குறைவுகளால் வரும் மானம் பறி போனது
ஓயாத என் உழைப்புகளால் அவையாவும் சீரானது

வாழ்வியலின் இழப்புகள் ஈடில்லாதது - என்றாலும்
தயக்கமில்லாத என் இயக்கமே என் வாழ்வானது

புல்லாய் வளர்ந்தால் கல்லாய் ஆவது கடினம்


அமைதியும் ஆழ்ந்த நன்மை செருக்குடனும் வளம் வருகிறேன்
வாழ்வியலேனும் புத்தகத்தில் நன்மை வரலாற்றை உருவாக்க

கதைகளை விட்டுவிட்டேன் கவிதைகளை நேசிக்கிறேன்
காதலை விரும்புகிறேன் அன்பே வாழ்வாவதால் - உங்கள் சி. எம் .ஜேசு

தொடரும் . . . .

என் படைப்புகள்
சி எம் ஜேசு பிரகாஷ் செய்திகள்
சி எம் ஜேசு பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2024 8:38 am

அவனுக்கு வயது அதிகம் தான் ஆனாலும் இளமை தோற்றத்தில் தோல்வி இல்லா துணையோடும் துள்ளும் மகனுடனும் வாழ்கிறான் இந்த வாழ்க்கையில் பணத்தை தவிர மற்ற மொத்த உலகமும் அவனுக்குள் அடங்கி இருப்பதை காண முடியும்

என்ன பிரச்னை என்றால்
அடிக்கடி ஏதோ ஒரு வகை காதலுள் நுழைந்து அதை ரசித்துக்கொண்டிருப்பான்

இப்போது இசை மீது அவனது காதல் அழகிய பொருள் தேடலாய் அமைந்து விட்டது பொருளும் தேடுகிறான் கூடவே காதலையும் தேடுகிறான் காதலிக்கும் சூழ்நிலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை

கலைகளுக்குள் வாழ்பவர்கள் கற்பனைகளுக்குள் வாழ்பவர்கள் என யாராக இருந்தாலும் இந்த காதல் பிறக்கும் ஆனால் இவன் காதல் முடியா காதல் முழுமையான ஈடுபாடு உ

மேலும்

சி எம் ஜேசு பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2024 3:06 pm

முதல் பார்வையில் அவள் யாரோ எனத் தெரிந்த அவனுக்கு காதல் பிறந்து காலம் நகர நகர மனதிலே இனம் புரியாத நினைவலைகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது என்பதை அவன் நன்கு அறிந்தவனாய் தெரிகிறான்

காதலுக்கு முன் அவன் அவளிடம் பேசிய அத்தனையும் தெய்வீகமாய் அவள் நினைவாகி நல்ல ஓட்டத்தை பெற்று தருகிறது என்கிறான்

காதல் வந்த பிறகு அவன் முன் போல அவளிடம் பேசுவதும் இல்லை அவளை பார்ப்பதும் இல்லை ஆனால் அவள் அருகிலே உள்ள அவன் அவளுக்காக அவள் வீட்டில் தனக்கு தெரிந்த பணிவிடைகளை புரிகிறான்

தெய்வீக காதல் காமத்திருக்காக பிறப்பது இல்லை இறை நாமத்தை மட்டுமே பழகி சேவையை உருவாக்கும் இவ்வகைக் காதல் நன்மக்களுக்கான சொத்து எனலாம்

காமத

மேலும்

சி எம் ஜேசு பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2024 7:53 am

அவன் மனம் முழுக்க
காதல் நிரம்பி வழிந்து கொண்டு ஓடியது
முன் தினம் அவளுக்கு அவன் சில தகவல் தருகிறான் பல கேள்விகள் எழுப்பினான்
என்னை நீ புறக்கனிக்கிறாயா உனக்கு என்ன தான் நேர்ந்தது நான் உனக்கு எப்படி உதவிட முடியும் என
வினாக்களோடு

செய்வதரியாது திகைத்தான் ஐந்து தினங்களாக அவளிடம் இருந்து அவன் கைபேசிக்கு அவன் அனுப்பிய குறுந்தகவலுக்கு பதில் ஏதும் வரவில்லை என்பது தான் அது

புரியாமல் உள்ளுள்ளே
உலாவினான் உடையாமல் உறுதுணையான இறையிடம் சென்று நம்பிக்கையோடு வினவினான் இன்றோடு அவன் காதலுக்கு அவளுக்கு முற்று புள்ளி வைத்து விடவா அல்லது அவளிடம் சொல்லி உடனடி தீர்வாக ஒரு குறுந்தகவல் அனுப்ப சொல்கிறீர்களா எனும

மேலும்

சி எம் ஜேசு பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2024 8:11 am

ஒரு நாள் மாலை நேரம் என் கைய்ப்பேசிக்குள் ஒரு குறுந்தகவல் வந்தது
சட்டென திறந்து பார்த்தேன் என் நண்பர் மூலமாக ஒரு விலாசமும் அதன் வழியும் கொண்ட வரைபடமும் கண்டேன்

அந்த விலாசத்தோடு இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்கள் சொன்னேன் அப்போது மறுமுனையில் பேசிய ஒரு பெண்மணி சொல்ல

ஒரு சிறுவனுக்கு வகுப்பு எடுக்கணும் மாதம் இவ்வளவு என நிர்ணயம் செய்து அடுத்த தினமே உடனடி சேவையாகி அந்த இல்லத்திற்குள் நுழைந்தேன்.அங்கே அந்த பெண்மணி தன் இரு பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொண்டிருந்தார் அதில் மூத்த பையனுக்கு நான் வகுப்பு எடுக்கணும் என்றார்,உடனே நானும் அன்றே அவன் வகுப்பை ஆரம்பித்தேன்

10 வயது

மேலும்

சி எம் ஜேசு பிரகாஷ் - சி எம் ஜேசு பிரகாஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2024 5:15 pm

நற்ச்செயல் 
நிறைக்கும் கைம் 
பெண்ணே - சி.எம்.ஜேசு 
------------------------------

உன்னால் முடியுது 
நிலவளவு நிமிர்ந்து 

அந்நிலவையும் 
புன்னகை முகமாக்க 

உன்னால் முடியுது 
உருவான சொந்தங்களை 
சந்தங்களாக்கி இசைக்க 

உன்னால் முடியுது 
வேரறுந்த மரத்தையும் 
பச்சை நிறமாக்கி வளர்த்தெடுக்க 

உன்னால் முடியுது 
உதவாத வாழ்வை உன்  உழைப்பால் வளர்த்தெடுக்க 

உன்னால் முடியுது 
சிறியது பெரியதெனும் 
பருவ பாகுபாடற்ற குடும்பத்தை உருவாக்க 

உன்னால் முடியுது 
சிந்தனைகளை செயல்களாக்கி அச்செயல்களை மகிழ்வாக்க 

உன்னால் முடியுது 
உன் விரல் வழுக்கிய வலயத்தை வெற்றிக் கோப்பைக்கான இடமாக்க 

உன்னால் முடியுது 
ஊர்சொல்லும் இழிச்சொல்லை இழுத்து 
அம்பாக்கி குறிபார்க்க 

உன்னால் முடியுது 
தீங்குகள் நிறைக்கும் உலகில் தீயாகி நல் தாயாக 
குடும்ப விளக்கேற்ற 

இனி நீ விதவை இல்லை 
உன் உழைப்பின்  வெளிச்சத்தில் உலகுக்கே 
வழிக்காட்ட வந்த தேவதை 

தொடரும் ...

மேலும்

சி எம் ஜேசு பிரகாஷ் - சி எம் ஜேசு பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2017 11:43 pm

மழையினால்
நிரம்பிய காலம் போல

கோடையினில்
கொடை தராதோ வானம் என
ஏங்கும் குளமாக நின்றேன்

வழிந்தோடி வாய்க்கால்களாக்கி
வாழவைத்துக்கொண்டிருக்கும்
இயற்க்கைக்கு என்நன்றி உரைப்பது

வந்த வழிகளிலெல்லாம்
பசுமை பரப்பி பண்பை நிறைத்து

அன்பை கொணர்ந்து
நீண்டு கடந்து கரைந்தேன்
இறையெனும் கடல்தனில்

நிதானம் கண்டேன்
நிம்மதி பிறந்தது

உதாரணங்கள் கொண்டேன்
உண்மைகள் தெரிந்தது

அமைதி தேடினேன்
ஆன்மிகம் கிடைத்தது - ஆனால்
ஆண்டவன் இன்னமும் கிடைக்கவில்லை

தந்தையாகி உயிர் மூட்டி
தாயாகி தயவாகி இல்லறவியலாக வாழும்

இறையின் வடிவங்களை
வார்த்தெடுத்து பதங்கள் தொழுகிறேன்

இற

மேலும்

உள்ளத்தில் உள்ள வன்மங்களை எண்ணத்தால் தூய்மையானதாக மாற்றினால் போதும் வாழும் வாழ்க்கையும் செழித்து விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 11:38 pm

வளர்ந்த பருவம் அவன்
வயதோ நாற்பத்தியெட்டு

அன்பின் பாத்திரம் - அவன்
நன்மையில் மற்றொருவரை
அணுகா தனியொன் என

நாளெல்லாம்
நன்மையுறு செயலாளனாய்
அன்பின் சொல்லாளனாய் இருக்க

நிறையுது அவனுக்கு
நேரெதிரே சொல்லம்புகள்

குறையுது அவனது உள்ளம்
கூறிய சொல்லம்புகளினால்

எய்பவர் தாய் அவரை
இயக்குது எந்த மாயை

மலர் போல மென்மையும்
மகிழ்வினை மேன்மையுமாய்
இணைத்து அணைத்து காத்தவர்
இன்றோ வேறு சாயலில்

புதைத்தாலும் பதைத்து
கரம்கொண்டு தோண்டி எழுப்பி
உயிர்த்தொடர வாழ்த்து தெரிவித்தவர்
இன்றோ வேறு சாயலில்

கரையும் போது அணைத்து
உலகமாய் பிணைத்து
கவலைவிடு தெய்வமாய் நானிருக

மேலும்

மாற்றம் என்பது மெழுகு வர்த்தி வெளிச்சம் இல்லை அது சூரியனின் ஒளிமயம் போல நெஞ்சுக்குள் வர வேண்டியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 10:55 pm

மரணத்தின் பீதியில் மனிதம் தன்
மாண்புகளை இழந்துக்கொண்டிருக்கிறது
---------- சி .எம் .ஜேசு பிரகாஷ் 2020 --------------

வாழ்வை கடத்தும் மனிதம் வீழ்வை நினையாது
இவ்வையகம் முழுவதும் பரவியிருந்த வேளையில்

புதிய நோயாகி பதியும் தொற்றாகி
மனிதத்தை தோற்கடிக்கும் கொரோனா ஒருபுறமிருக்க

எங்கே - தனக்கு வந்துவிடுமோ என
அஞ்சி நடுங்கி அஞ்சடிக்கும் தள்ளி நின்று
கூட்டத்தைக் கலைக்க முயலும் காலம் மறுபுறம்

பசியால் பட்டினியால்
கவலையால் கனவுகளோடு காலம் முழுமைக்கும்
வறுமையில் வாடுவோர் கதி இங்கே அதோ கதி என
ஆகிப்போகும் நிலை காணாய் காலமே

மனிதனின் மதியாமையால்
ஏற்படுத்தும் சட்டங்கள் இங்கே

மேலும்

சி எம் ஜேசு பிரகாஷ் - ஜின்னா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2015 1:29 am

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,

இங்கே பதிய போவதை பார்க்காமலே 
தயவு செய்து யாரும் தங்களுடைய பகிர்வை பகிர்ந்து விடவோ அல்லது கருத்து பதிந்து விடவோ வேண்டாம்..

மேலும் 
இங்கு சொல்லப் பட்டவை யாரையும் புன்படுத்துவன அல்ல
இது வெறும் கற்பனையே என்று சொல்லும் முட்டாளும் நான் அல்ல...

மேலும்
வெறும் மொய்யெழுதும் வாசகம் மட்டும் அல்ல இது...
அதையும் தாண்டி யோசிக்க வைக்கும் ஒரு எண்ணம் இது...

இப்போது நாம் யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்...
இதை இந்த தளத்தார்கள் தவறாக புரிந்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நன்புகிறேன்..

பொதுவாக இங்கு வருபவர்கள் யாருக்கும் வேலை இல்லாமல் 
வெட்டியாக சுத்திக் கொண்டிருப்பவர்கள் வருவது இல்லை என்று நினைக்கிறேன்..
(இதில் வேலை தேடி கொண்டிருப்பவர்களை மதிக்கிறேன்... அவர்களை நான் சொல்ல வில்லை என்று 
சொல்லி கொள்கிறேன்... அப்படியும் வருகிறவர்கள்... இன்னும் பாராட்டுக்கு உரியவர்கள்..)

இப்படி 
குடும்பத்தின் ஆசைகளை துறந்து
வேலை பளுவை மறந்து 
இங்கு வருபவர்கள்
வெறும் வேடிக்கை மட்டுமா பார்க்க வருவார்கள்? இங்கு...

மாறாக என் தாய் மொழியில் ஒரு தளம் இருக்கிறது
அங்கு சென்றால் என்னால் முடிந்த வரை 
என்னால் கற்று கொள்ள முடியும் 
என்னால் இயன்ற வரை கற்றுக் கொடுக்கவும் முடியும் 
என்ற உயரிய நோக்கத்தில் வருபவர்கள்தான் அதிகம்...

இன்னும் நான் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறேன்
இப்படி பட்ட மொழி சிந்தனை அல்லது
மொழி பற்று உள்ளவர்கள்தான் இந்த தளத்தை இயக்கி 
கொண்டிருக்கிறார்கள் அல்லது இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று
நம்புகிறேன்...

அப்படி வருபவர்களுக்கு இங்கு என்ன கிடைக்கிறது?

தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்களுக்கு இந்த தளம் 
எப்படி வடிகாலாகும்?

அப்படி தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்கள் இந்த தளத்தில்
புகுந்து வேறு திசை திருப்ப நினைத்தால் இதை
தளம் தாங்கி கொண்டாலும் இதில் படித்து ரசிக்கிறவர்வர்கள்
பொறுத்துக் கொள்வார்களா? என்பதே எனது கேள்வி?

இங்கு வருகிறவர்கள் யாரும் 
தவறான எண்ணத்தோடு வருவது கிடையாது....

வருபவர்கள் யாவரும் 
தமிழ் மேல் ஈடுபாடு கொண்டவர்கள்
அல்லது தமிழ் மேல் ஆர்வம் கொண்டவர்கள்...

அப்படி இருக்கும் போது 
ஒரு தனி நபர் தமிழை தரக்குறைவாக எழுதும் போது 
அல்லது பேசும் போது அந்த தமிழ் எதற்கு 
அல்லது இந்த தளம் எதற்கு?
என்று கேட்க தோன்றுமா இல்லையா?

இதில் இணைந்திருக்கும் பல பேருக்கும் தெரியும்
நாம் தமிழால் இணைந்திருக்கிறோம் என்று...

ஆனால் 
அந்த புனித தன்மை கெடுக்கும் வகையில்
ஒரு சிலர் நடத்தும் நாடகத்தில் எல்லோரும் நடிகர்கள் ஆகி விடுகின்றனர்...

இதில் கொடுமை என்ன வென்றால்
சில கதா நாயகர்களும் வில்லன்களாகி விடுங்கின்றனர்...

இங்கு வரும் எல்லாருமே தமிழை வளர்க்க வருகிறார்கள் 
என்று நினைத்திருந்தேன் ஆனால்
அதை தவிர்த்து எல்லாவற்றையும் வளர்க்க வருகிறார்கள் 
என்றால் இந்த இடம் அதற்கு பொருத்தமானதா?

இங்கு வரும் எல்லாருமே 
ஒரு விதத்தில் கலைஞர்கள்/இளைஞர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

ஆனால் சில பதிவுகளை பார்த்த பிறகு
நாங்கள் இதில் எந்த பகுதியிலும் சேராதவர்கள்...
எனக்கும் தமிழுக்கும் ரொம்ப தூரம் என்பதாக இருக்கிறார்கள்...

அப்படி யோசிக்கும் சில தோழர் தோழமைகள்
வேறு எங்காவது சென்று தங்கள் மனக் குறையை தீர்த்து கொள்ளலாமே...
ஏன் எங்களிடம் அல்லது இந்த தளத்திடம் வந்து இச்சையை தீர்த்துக் கொள்கிறீர்கள்...?

நாங்கள் வேறு திசை நோக்கி பயணம் போகிறோம்
அதுவும் உங்களிடம் சொல்லி விட்டுதான்...
ஆனால் 
அது தெரிந்து கூட 
எப்படி தமிழ் வளர்ந்து விடும் ?
அதை எப்படி வளர விடுவோம்?
 என்று போட்டிக் கொண்டு வந்தால் எப்படி?

எந்த விமர்சனம் என்றாலும் நேருக்கு நேராக வையுங்கள்..
உங்கள் பெயரையும் ஊரையும் 
யாருக்கு மகன் என்றும் 
தெளிவாக சொல்லுங்கள்...

இதில் மூடி மறைக்க என்ன இருக்கிறது...
எனது அப்பா பெயரை சொல்ல 
எனக்கு எந்த தயக்கமும் இல்லை...
எனது அம்மா மொழி (தாய் மொழி) தமிழ் என்று சொல்ல
எப்போதும் நான் தயங்கியது இல்லை...
என் முகத்தை காட்ட எப்போதும் மறுத்ததில்லை...

பிறகு எதற்கு இந்த பிதற்றல்கள்?

உங்கள் சுய விவரத்தை காட்ட துணிவில்லாவதவர்கள் கையில்
எப்படி எங்கள் வருங்காலத்தை சமர்பிக்க முடியும்?

தமிழ் பேசும் எல்லோரும் ஒரு விதத்தில்
அண்ணன் தம்பிகள்தானே...
அல்லது சகோதர சகோதரிகள்தானே...
இதில் என்ன வெக்கம் இருக்கிறது... பெயரை மாற்றி வைத்துக் கொள்ள?

ஒரு வேலை பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்
அது தங்களுக்கு பிடித்த பெயராக இருக்கட்டும்...
அப்படி பெயரை மாற்றி வைத்து கொள்ளும்போது 
உங்களின் மொழியை மாற்றி வைத்துக் கொள்ள முடியுமா?

இங்கு 
யாரை திட்டுகிறீர்கள்?
யாரை குறை சொல்கிறீர்கள்?
யாரை விரட்டுகிறீர்கள்?
யாரை வெளி ஏற்றுகிறீர்கள் ?

ஒரு தமிழனுக்கே ஒரு தமிழன் இப்படி பட்ட செயல் செய்தால்
யார் தமிழனை காப்பாற்றுவார்கள்?
(இதில் எனது தாய் மொழி தமிழ் என்று பெருமையாக போட்டுக் கொள்வீர்கள்... 
அது வேற கதை )
ஆனால் வேறு எங்காவது இலங்கையிலோ அல்லது
வேறு எங்காவது தமிழருக்கு ஒரு பிரச்னை என்றால் 
எப்படி எல்லாரும் ஒன்று கூடுகிறீர்கள்? 
இது வெட்கமாக தோன்ற வில்லையா?

இங்கு வருபவர்கள் யாவரும் தங்களது 
எவ்வளவு சொந்த பந்தத்தை விட்டும்
தங்களது நேரத்தை செலவிட்டும் வருகிறார்கள்
என்று சொன்னால் புரியுமா உங்களக்கு?

அப்படி வந்து பார்க்கும் போது சில 
பதிவுகள் என் தாய் மொழியை களங்கப் படுத்தி எழுதி இருப்பதைக் கண்டு 
யாரால் பொறுமையாக இருக்க முடியும்?

ஒருவேளை அதையும் தாங்கி கொள்ளும் சக்தி
யாருக்காவது இருக்குமென்றால் அதை 
அவர்கள் தாயை தரக்குறைவாக பேசியவரையும்
மகான் என்று சொல்ல கூடும்....

தமிழ் மேல் உணர்வு கொள்ளாதவர்கள் 
இந்த தளத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று நினைக்கிறேன்...

அவர்களுக்கு பொழுது போக வில்லை என்றால்
ஏதாவது முகநூல் அல்லது அப்படி பட்ட சமூக வலைத்தளங்கள்
ஏராளமாக இருக்கிறது...

அதை விடுத்து 
இந்த தளத்தையும்(இங்கு மட்டுமல்ல) நம் தமிழையும் தயவு செய்து அசிங்க படுத்த வேண்டாம்...

எவ்வளவு பெரிய 
உலகம் போற்றும் மொழியை நாம் பேசுகிறோம் என அறியாதவர்கள்தான் தமிழர்கள் (நாம்) எனவும்...
தமிழை தமிழர்களாலே கெடுக்க படுவதாகவும் உலகம் நம்மை காரி துப்புகிறது...

இதற்கு எடுத்துகாட்டாக நாமும் இங்கு 
செயல் படுகிறோம் என்று நினைக்கும் போது 
மனம் வருத்தம்தான் அடைகிறது...

இதில் 
பெயர் மாற்றம் மட்டும்தான் ஒரு சுகம் என்றால்
எல்லோரையும் ஏமாற்றுவதுதான் ஒரு செயல் என்றால்..
எல்லோரையும் திட்டுவதுதான் ஒரு பழக்கம் என்றால்...
எல்லோரையும் கேவலப் படுத்துவதுதான் உங்கள் பொழுது போக்கு என்றால்...
எல்லோரையும் காயப் படுத்துவதுதான் உங்கள் எண்ணம் என்றால்...
அதற்கு தமிழை தயவு செய்து பயன் படுத்தாதீர்கள்...

அதற்கு வேறு தளம் இருக்கிறது
அதற்கு வேறு இடம் இருக்கிறது...

தளத்தார்க்கு ஒரு கேள்வி...

தளத்திற்கு உறுப்பினர்கள் ஆகாமல் 
கருத்து போட முடியாதல்லவா?
அப்படி ஒரு அருமையான முறை வைத்திருக்கும்போது
ஏன் உறுப்பினர் ஆகும்போது அவர்களின் ஆதாரத்தை (ID proof )
வாங்காமல் உள்ளே அனுமதிக்கிறீர்கள்...?

இப்போது இந்தியாவில் எதற்கு எடுத்தாலும் அதை கேட்கிறார்களே...

இப்படி பட்ட பிரச்சனையில் நாம் எத்தனை 
நல்ல எழுத்தாளர்களை இந்த தளம் இழந்து இருக்கிறது என்று
நான் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன்...

அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும் கருதுகிறேன்...
அப்படி சிறந்த எழுத்தாளர்களை இழந்து விட்டு 
நாம் என்ன செய்ய போகிறோம் நாம் தனித்து நின்று...

ஒரு சம்பவம் உங்களுக்காக...

நமது மகாத்மாவை அரை நிர்வாண பக்கிரி என்று சொன்ன
வின்சென்ட் சர்ச்சில் (அன்றய ஆங்கிலேய அரசன்/தலைவன்)
ஆனால் அவரை பற்றி புரிந்து கொண்ட பிறகு எப்படி எல்லாம் 
மன்னிப்பு கேட்டான் என்பது நமது வரலாறு...

ஒரு தேசத்துக்கு எத்தனையோ தலைவன் வரலாம்
ஆனால் தேசத்துக்கு ஒரே ஒரு பிதாதான் அது நமது தேசப் பிதா காந்தி..

இங்கே திட்டியவனை இந்த உலகம் போற்ற வில்லை 
மாறாக 
மன்னித்தவனை அல்லது பொறுத்துக் கொண்டவனை 
இந்த தேசமே/உலகமே போற்றியது ஒரு மகாத்மாவாக....

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்

எல்லா நேரத்திலும் 
நீங்கள் அடிக்கும் போது கன்னத்தை காட்டுகிறோம்...
மீண்டும் நீங்கள் அடிக்கும் போது மறு கன்னத்தையும் காட்டுகிறோம்
ஆனாலும் நீங்கள் அடிக்கும் போதெல்லாம் 
கன்னத்தை காட்டுவதற்காகவே எங்கள் கன்னம் 
படைக்கப் பட்டதாக மட்டும் எண்ணி கொள்ளாதீர்கள்

வாழ்க தமிழ்
வளர்க தமிழர்கள்...

நட்புடன்...
ஜின்னா.

மேலும்

வாழ்த்துக்கள் ஜின்னா நல்லெண்ண பதிப்பிற்கு வாழ்த்துக்கள் தமிழை தாய்த்தமிழை அழகிய சொற்றொடர்களால் அலங்கரிப்பவர்களே மதிப்பு மிக்கவர்கள் - அதை பழகிய வார்த்தைகளால் அலங்கோலப்படுத்துபவர்கள் தமிழை நேசிக்க இயலுமா என யோசிக்க தோணுகிறது 17-Jan-2019 10:06 pm
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்... அருமை, நம் தாய் மொழியாம் தமிழோடு, தமிழர்களும் வளர்க - மு.ரா. 05-Feb-2017 11:13 am
மன்னிக்கவும் வேறு பக்கத்தில் பதிவிட வேண்டியதை மாற்றி பதிவிட்டுவிட்டேன் : 09-Dec-2015 7:35 pm
நான் மிகவும் கர்வம் கொள்கிறேன் !!! இப்படிப்பட்ட உறவுகளுக்குள் நான் ஒருத்தியாய் இருக்கிறன் என்பதில் ! தம்பி திருமூர்த்தி நீ நிச்சயம் வெல்வாய் ஜின்னா தோழரை போன்றோர் உன்னுடனிருக்கையில் ! 09-Dec-2015 7:32 pm
சி எம் ஜேசு பிரகாஷ் - சி எம் ஜேசு பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2015 9:41 pm

வினை இல்லாத நாடு வேண்டுவோம்
விசைகள் இல்லாத அம்பினை வைத்திருப்போம்

குனமாராட்டம் நிறைந்த நாட்டினில்
ஒரே மனதை உருவாக்கும் இயக்கம் வளர்ப்போம்

இதயங்களை செம்மைப்படுத்தும்
ரணங்கள் இல்லாத மதங்கள் வளர்ப்போம்

உழைக்கும் உண்மை செயல்கள் நிறைந்த
செழிக்கும் எண்ணம் மிகுந்த இயக்கம் காணுவோம்

போராடி உயிர்துறக்கும் போக்கினை விட்டு
புகழாடிபோதிக்கும் திறன் வளர்ப்போம்

மனங்களை கட்டுபடுத்தும் மதங்கள் போல - நம்
இனங்களை கட்டுபடுத்தும் இதயங்கள் வளர்ப்போம்

புதையுண்ட பிணங்களைத் தோண்டாமல் - புவி
நிறைந்திருக்கும் உயிர்களுக்கு வாழ்வைச் சமைப்போம்

கற்றது எதுவென்றாலும் கல்லாதது உலகம் என்

மேலும்

நன்றி தோழரே 13-Aug-2015 2:51 pm
நல்ல கவிதை... வந்தே மாதரம்... அருமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 12-Aug-2015 11:25 pm
சி எம் ஜேசு பிரகாஷ் - சி எம் ஜேசு பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 3:50 pm

யுகத்தில் மலர்ந்தேன் கருவறை நின்று
முகத்தில் மகிழ்வை பெற்றோருக்கு தந்து

செஞ்சி பக்கம் சிறிதோர் கிராமம்
பஞ்சு மனசுள்ள தாய் தந்தைக்கு மகனாக

கிராமம் விட்டு நகரம் நகர்ந்தேன்
பட்டினப்பாக்கம் கடலோர வாழ்க்கை

கூலி வேலை தான் குழமி வாழ்ந்தோம் என
கூவி காதிலே உழைப்பை வளர்த்தாள் என் தாய்

ஆண்டவன் எனக்கு அன்றே தெரிந்தார்
உயர்ந்து நின்ற சாந்தோம் ஆலயம் பார்த்தேன்

வேலை வந்தது தந்தை கிராமம் செல்ல
வேண்டிய காலங்கள் அங்கே வாழ்க்கை நகர்ந்தது

மண்ணை ருசித்தேன் விண்ணை ரசித்தேன்
என்னைச் சுமந்த அன்னையின் சொல்கேட்பேன்

காலங்கள் சென்று 80 துக்கு வந்தது மீண்டும்
சென்னைக்கு என்னை அழை

மேலும்

நன்றி தோழரே 25-Dec-2014 9:31 am
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Dec-2014 12:35 am
சி எம் ஜேசு பிரகாஷ் - சி எம் ஜேசு பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2014 8:32 pm

ஊழல் களைந்து உழைப்பை மதித்து
நன்மைப் பரப்பும் அரசியல் வேண்டும்

உண்மைப் பேசி குறைகள் கூறாமல்
நிறைகள் செய்யும் அரசியல் வேண்டும்

நெஞ்சை நிமிர்த்தி வீரம் பேசாமல்
அன்பைப் பொழியும் அரசியல் வேண்டும்

பண்பை மதித்து பக்குவங்கள் செய்ய - தன்
உயர்வை விரும்பா அரசியல் வேண்டும்

தீமைகள் கண்டு அதன்தீவிரங்கள் கண்டு
குற்றங்கள் குறைக்கும் அரசியல் வேண்டும்

கலைகள் வளர்த்து கவிதைகள் புனைந்து
தமிழை வளர்க்கும் அரசியல் வேண்டும்

தங்கம் மறந்து பசியைப் போக்கும்
விவசாயம் செழிக்கும் அரசியல் வேண்டும்

நாகரீகம் நன்மை என்றாலும் - நம்
பாரம்பரியம் வளர்க்கும் அரசியல் வேண்டும்

முழுதும

மேலும்

என் மனம் போன்று வாழ்வியலில் பயணிக்கும் - என் எழுத்து தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 08-Dec-2014 11:35 pm
ஆஹா இப்படிப் பட்ட அரசியல் அமைந்தால் மிக்க சந்தோசம் தோழரே.. அரசியல் கலக்கா அரசியல்... அருமை.. 07-Dec-2014 12:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
user photo

nuskymim

kattankudy
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவரை பின்தொடர்பவர்கள் (13)

user photo

nuskymim

kattankudy
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
மேலே