தேட வேண்டியதில்லை இறைவன் இல்லற வடிவங்களாகி வாழ்கிறார் - சி எம் ஜேசு

மழையினால்
நிரம்பிய காலம் போல

கோடையினில்
கொடை தராதோ வானம் என
ஏங்கும் குளமாக நின்றேன்

வழிந்தோடி வாய்க்கால்களாக்கி
வாழவைத்துக்கொண்டிருக்கும்
இயற்க்கைக்கு என்நன்றி உரைப்பது

வந்த வழிகளிலெல்லாம்
பசுமை பரப்பி பண்பை நிறைத்து

அன்பை கொணர்ந்து
நீண்டு கடந்து கரைந்தேன்
இறையெனும் கடல்தனில்

நிதானம் கண்டேன்
நிம்மதி பிறந்தது

உதாரணங்கள் கொண்டேன்
உண்மைகள் தெரிந்தது

அமைதி தேடினேன்
ஆன்மிகம் கிடைத்தது - ஆனால்
ஆண்டவன் இன்னமும் கிடைக்கவில்லை

தந்தையாகி உயிர் மூட்டி
தாயாகி தயவாகி இல்லறவியலாக வாழும்

இறையின் வடிவங்களை
வார்த்தெடுத்து பதங்கள் தொழுகிறேன்

இறைவன் என்னிடையே தான்
பல வடிவங்கள் உடைத்தவராகி
உயிர் கொண்டு வாழ்கிறார்

துயரங்களில் துணையாகி
மகிழ்வுகளில் ஞானம் நிறைய

நன்மையாய் நான் வாழ
வழிகளை காட்டி ஆறத் தழுவும் உலகாகி

மழையும் வெயிலுமாக
இருளும் ஒளியுமாக

பள்ளமும் மேடுகளுமாக
பண்புகள் நிறைக்க வாழ்வை வழங்கி வருகிறார்

வாழ்த்துக்கள் பதித்து
வர்ணனைகள் இணைக்கிறேன் - இனி

வருங்காலம் நன்மையையும்
உண்மையையும் கொண்டு வந்து
உலகினோரை காத்திடட்டும்

தேட வேண்டியதில்லை
இறைவன் இல்லற வடிவங்களாகி வாழ்வதால்

எழுதியவர் : சி. எம் . ஜேசு (31-Oct-17, 11:43 pm)
பார்வை : 107

மேலே