எதிர்காலம்

பயம் கொடுக்கக்கூடாது
சுகம் கொடுக்கவேண்டும்
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள்..

நாட்கள் ஆக ஆக‌
வயதும் அதிகமாகும்
நோயும் அறிமுகமாகும்
கட்டுப்பாடாய் உண்டு
உடற்பயிற்சியை சொந்தமாக்க‌
நலமான எதிர்காலம் நமக்கானது
வளமான நாட்கள் வரவேற்றிடும்

நமது எதிர்காலம் விடுங்கள்..
நாட்டின் எதிர்காலம்...
உலகின் எதிர்காலம்... எப்படி என்றால்...

நம் கையிலே தான் எல்லாம்..
நமது எண்ணங்களே நாளைய பிரதிபலிப்புகள்
நல்ல சிந்தனையை எங்கும் விதைக்க‌
நாட்டிற்கும் உலகிற்கும் நலமாகும்...

எதிர்காலம் இன்பம் தர‌
இருக்கும் காலத்தை நன்றாக வாழ்வோம்..
அது மட்டுமல்லாமல்
கூட இருப்போரையும்
சுகமாய் வாழவிடுவோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 8:36 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : yethirkaalam
பார்வை : 3331

மேலே