காதலின் தேடல் - சிஎம் ஜேசு
ஒரு நாள் மாலை நேரம் என் கைய்ப்பேசிக்குள் ஒரு குறுந்தகவல் வந்தது
சட்டென திறந்து பார்த்தேன் என் நண்பர் மூலமாக ஒரு விலாசமும் அதன் வழியும் கொண்ட வரைபடமும் கண்டேன்
அந்த விலாசத்தோடு இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்கள் சொன்னேன் அப்போது மறுமுனையில் பேசிய ஒரு பெண்மணி சொல்ல
ஒரு சிறுவனுக்கு வகுப்பு எடுக்கணும் மாதம் இவ்வளவு என நிர்ணயம் செய்து அடுத்த தினமே உடனடி சேவையாகி அந்த இல்லத்திற்குள் நுழைந்தேன்.அங்கே அந்த பெண்மணி தன் இரு பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொண்டிருந்தார் அதில் மூத்த பையனுக்கு நான் வகுப்பு எடுக்கணும் என்றார்,உடனே நானும் அன்றே அவன் வகுப்பை ஆரம்பித்தேன்
10 வயது இருக்கும் அவனுக்கு பேசும் ஆற்றல் சற்றே குறைவாக இருந்தது நற்காலியில் உட்கார்ந்து இருக்க முடியாத அளவில் அவனுக்குள் நெளிவு சுளிவு திருப்பங்கள் என மிக குறும்பாக தென்பட்டான் அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை மேலும் இதுவெல்லாம் எனக்கு புதில்லை காரணம் கல்வியல் கற்றறிவித்தல் முறையில் முப்பது வருடம் அனுபவ அறிவு உள்ளவனானேன்
நல் எண்ணங்களை செயல்களாக்கினேன் வாரம் இருமுறை வகுப்பை திட்டமாக்கி அதை சரியாக ஒரு மூன்று மாதங்கள் செயல் படுத்தினேன் அதற்குள் தான் எனக்கான காதல் ஆரம்பம் ஆனது அங்கே
கணவரை இழந்த பெண் சிறு வயதுடைய பிள்ளைகள் உற்றார் உறவுகள் இருந்தும் தனிமையில் வாழ்பவளாக அப் பெண்மணி தெரிந்தாள்
இந்த சூழலில் பிள்ளைகள் இருவரும் ஆசிரியர் எனும் நிலை மறந்து தந்தையாய் எனை கண்ட ஸ்பரிசங்கள் நிகழக் கண்டேன் அவ்வப்போது என் கண்கள் ஈரமாவது அப்பெண்மணிக்கு தெரியாது அப்போது தான்
எனக்குள் வந்தது அந்த காதல் இதற்க்கு சேவைக் காதல் எனும் பெயர் பொருத்தமாகும் அங்கே நிகழ்ந்த அந்த சூழ்நிலையை என் குடும்பம் போலே சித்தரிக்க ஆரம்பித்தேன்
என் வீடாக தெரிந்த அந்த இல்லம் என் பிள்ளைகளாக தெரிந்த அந்த பெண்மணியின் பிள்ளைகள்
தொடர்ந்து வெளியில் யாரிடமும் சொல்லாமல் அந்த இல்லத்திற்கு சேவைகளாற்ற தொடங்கினேன் ஆசிரியர் வேலை மட்டுமல்லாது
என்னால் அவ்விடத்திலே அவர்களுக்கு என்ன நற்ச்செயல் நிகழத்த முடியுமோ அவ்வளவும் நிகழ்த்தினேன்
என் அளவிட முடியா அன்பு அவர்களுக்கு புரியாது என்னை ஒரு ஆசிரியராக மட்டுமே பார்க்கின்றனர் அதுவும் எனக்கு புரிந்தது
என்றாலும் வகுப்பின் சரியான நேர முடிவிலும் இன்னும் நாழிகள் இருக்கு சீக்கிரம் முடித்து விட்டிர்களே எனும் அந்த பெண்மணியின் வார்த்தை என் இதயத்தை கிழித்து ரணத்தை உண்டாக்கி கண்களை ஈரமாக்கியது அப் பெண்மணிக்கு தெரியாது
என்றாலும் வேறு ஒரு வகுப்பின் நேரத்தை இரட்டிப்பாக்கி எடுத்து முடித்த போதும் கூட அப்பெண்மணி என் அருகில் வந்து வகுப்பு முடிஞ்சிருச்சு இல்ல என
இன்னும் இருங்களேன் எனும் ஏக்கத்தின் எண்ணத்தில் கேட்டதாகவே எனக்கு தோன்றியது அதன் பின்னர் என்நேரத்தை அங்கே அதிக படுத்தினேன்
சிறுவன் இனிமையாக பாடங்களை கற்றுக்கொள்கின்றான் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தின் இடைவேளையில் அப்பெண்மணி என் அருகில் வந்து தன் பிள்ளைக்கு மருந்து ஊட்டும் போது எனக்குள் பேரின்பத்தை உருவாக்கும் அது அவளுக்கு புரியாது ஏனினில் என் காதல் தனிக்காதல் தானே தொடரும் ....