வீரா இங்க வாடி
தெருவில் இரு நண்பர்கள் நடைப்பயிற்சி
போகிறார்கள். ஒரு வீட்டில் ஒரு பாட்டியின்
குரல்: "வீரா, இங்க வாடி".
@@@@@
இதைக் கேட்டதும் இரு நண்பர்களும்
அதிர்ச்சி அடைகிறார்கள். "என்னய்யா,
அநியாயம் இது. நாட்டைக் காக்கும்
இராணுவ வீரரைப் பேரைச் சொல்லிக்
கூப்பிட்டாக்கூடப் பரவாயில்லை. அவர்
ஆண். ஒரு ஆண் மகனை "வாடி"னு
கூப்பிட்டா அவரை அவமதிப்பது ஆகாதா?
@@@@@
ஆமாய்யா. நாட்டுப் பற்று உள்ள நாம் இதை
சும்மா விடக்கூடாது. வா கேட்போம்.
@@@@@@
(அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்துகிறார் ஒருவர்)
ஒரு பாட்டி வந்து "யாருங்க நீங்க? என்ன
வேணும்?" என்று கேட்கிறார்.
@@@@@
உங்க வீட்டில் இராணுவ வீரர் யாராவது
இருக்கிறாரா?
@@@@@
ஆமாம்.
@@@@@@
நீங்க எப்படி அவரை "வாடி"னு கூப்பிட்டு
அவமானப்படுத்தலாம்?
@@@@@@
வீரா என் பேத்தி பேரு. அவள்
இராணுவத்தில் அதிகாரியாக
இருக்கிறாள். வீரா வை "வாடா"ன்னா
கூப்பிட முடியும்?
@@@@@@@
மன்னிச்சுக்குங்க அம்மா.
@@@@@@@@#@@@#@@@@@@@@@###@##
Veera = Brave, faith, the Brave. Unisex name.
Indian, Finnish origin.
ஒரு தமிழ் தொலைக்காட்சி தொடரின்
பெயர்
'வீரா'. அது அந்தத் தொடரின் கதாநாயகி
கதாபாத்திரத்தின் பெயர்.