சுருக்கேஷ்

செய்தித் தொடர்பாளர்கள் படப்பிடிப்பு

அறை. விவாத நிகழ்ச்சி தொடங்கும் முன்பு.

#######

என்னய்யா மூன்று மாதத்தில சுருக்குஷு

முகம் உடம்பு எல்லாம் வீங்கின மாதிரி

தெரியுது?

@@@@@@@


சுருக்கேஷு விவாதங்களில் அதிகமாகப்

பொய் பேசுகிறார். நிகழ்ச்சியை உலகம்

முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள்

பார்க்கிறார்கள். அதனால் அவர் சார்ந்த


கட்சிக்கு விளம்பரம் கிடைக்குது‌. அதனால்


ஒரு பொய்க்கு ஆயிரம் ரூபாய்

தர்றாங்களாம். அவரோட வருமானம்

கூடிப் போகுது. வருமானம் அதிகம்


வர்றதால மூன்று வேளையும் மூக்கு முட்ட

மாமிச உணவு. மூணு மாசத்தில் எடை

கூடி உடம்பு முகம் எல்லாம் சதையேறி

வீங்கின மாதிரி தெரியுது.


@@@@@@

மூன்று வேளையும் மாமிச உணவைச்

சாப்பிட்டு எப்படி செரிக்க வைக்கிறார்.


@@@@@@

அதுவா? ஒரு நாளைக்கு மூன்று விவாத

நிகழ்ச்சில கலந்துக்கிறாரு. அடுக்கடுக்காப்


பொய்யை அள்ளி வீசி மற்ற செய்தித்

தொடர்பாளர்களைப் பேசவிடாமல்

தொடர்ந்து இடைமறித்துப் புதுப் புது

பொய்களைச் சொல்வார். ஒரு மணி நேர

நிகழ்ச்சில சுருக்கேஷ் அடிக்கடி

இடைமறித்து பொய் பேசி இருபது

நிமிடங்களை எடுத்துக்குவார்.

விளம்பரங்களுக்கு பத்து நிமிடம்.

நெறியாளருக்கு பத்து நிமிடம். மிச்சம்

உள்ள இருபது நிமிடங்கள்ல மற்ற நான்கு

செய்தித் தொடர்பாளர்களுக்கு ஆளுக்கு

ஐந்து நிமிடம். அப்போதும் குறுக்கிட்டு வார்

சுருக்கேஷு.

@@@@@@@

சரி. அவருக்கு 'சுருக்கேஷு'னு எப்படி

பெயர் வந்தது?

@@@@@@

அவரது உண்மையான பெயர் சுரேஷ்.


விவாத நிகழ்ச்சிகள்ல சுருக்குச் சுருக்கு னு


முள் குத்தற மாதிரி பொய்யைப் பேசி மற்ற

செய்தித் தொடர்பாளர்களுக்கு எரிச்சலை

மூட்டுவார். அதற்காகவே தனது பெயரைச்

'சுருக்கேஷ்'னு மாத்திட்டாரு.

@@@@@@@@@@

உம். கோமாளித்தனமா பொய் பேசி

உடம்பையும் வருமானத்தையும்


பெருக்குகிறார் சுருக்கேஷ்.

எழுதியவர் : மலர் (24-Sep-24, 9:52 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 26

மேலே