தங்கரதம் வீதியுலாப் போவது போலயிளம் மங்கையர்

திங்கள்நல் மார்கழி தீண்டும் பனிக்காற்று
தங்கரதம் வீதியுலாப் போவது போலயிளம்
மங்கையர் கையில் மலர்த்தட்டேந் திச்செல்வர்
திங்கள் பிரியாத காலைகண்ணன் ஆலயம்
எங்குமிலா சொர்க்கம் இது
-----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
அடி எதுகை --திங் தங் மங் திங் எங்
1 3 ஆம் சீர் மோனை --தி தீ த போ (இன மோனை ) ம ம தி கா (இன மோனை ) எ இ