கவிதை எழுதவோ கண்ணழகிற்கு

கவிதை எழுதவோ கண்ணழ கிற்கு
தவழ்ந்து வரும்தென்றல் தொட்டு மகிழும்
கருங்கூந் தலுக்குப்பூக் கொண்டு வரவோ
சுருக்கமா கச்சிரிக்கும் சிக்கனக் காரி
கொடிநீ அணிய சுடிதார் தரவோ
அடிஎடுத்து மெல்ல அழகாய்நீ வந்தால்
விடியலும் பின்நிற்கு மோ