பார்த்தாய் ரசித்தாய் பருகிடாத தேனிதழ்ப் பூ

வருடியது தென்றல் மலரிதழை மெல்ல
திருடின வண்டுகள் தேனினைப் பூவில்
அருகினில் வந்து அதைநீ ரசித்தாய்
பருகிடாத தேனிதழ்ப் பூ

வேறு
வருடியது தென்றல் மலரிதழை மெல்ல
திருடின வண்டுகள் தேனினைப் பூவில்
அருகினில் வந்து அதனிடம் கற்றாய்
திருடுவதோ நீயும்நெஞ் சை

வேறு
பருகிடாத தேனிதழ்ப் புன்னகைப் பாவை
அருகினில் நான்வந்தால் அன்பில்மென் தேனைப்
பருகத் தருவாயா பூவிதழே நாணித்
தரமறுப் பாயாநீ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-25, 9:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே