நவராத்திரி

நவராத்திரி

அழகை விடுத்து அகிலம் காக்க
ஆயுதங்கள் பல கையில் ஏந்தி
இன்முகமும் கனலாக உருமாறி
ஈசன் இட்ட அந்த கட்டளையை
உறுதியுடன் உண்மையாக்கி விட
ஊண் தவிர்த்து கடும் தவமிருந்து
எட்டுகைகள் கொண்டு எத்திசையும் நடுங்கிட
ஏவினாள் கணைகளையும் சூலத்தையும்
ஐயம் கொண்ட மனங்கள் மகிழ்ந்திட
ஒருதுளி உதிரமும் நிலத்தில் வீழாது உறிஞ்சினாள்
ஓசையின்றி சாய்ந்தான் எருது தலை அரக்கனும்
மங்கையின் கைகொண்டு மடிவேன் என்ற மகிஷனை
மாய்த்திட தேவி தவம் எடுத்து கொண்ட நவராத்திரியை
நல்லிசை கொண்டு வாழ்த்தி வணங்கி கொண்டாடிடுவோம்

எழுதியவர் : கே என் ராம் (11-Sep-25, 11:22 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 8

மேலே