என்றும் ஒழுக்கம் பிழையா தவர் - ஆசாரக் கோவை 21

இன்னிசை சிந்தியல் வெண்பா

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவர்! 21

- ஆசாரக்கோவை

பொருளுரை:

என்றும் நல்ல ஒழுக்கத்தினின்றும் தவறாத பெரியோர்கள் விருந்தினர், மிக முதியவர்கள், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள் என்று சொல்லப் பட்ட இவர்களுக்கு உணவு கொடுக்காமல் உண்ண மாட்டார் .

கருத்துரை:

விருந்தினர் முதலியவர்களுக்கு உணவு கொடாமல் தாம் முன்னர் உண்ணலாகாது.

சிறை - சிறகுகளையுடைய பறவை
விருந்தினர் - புதியவர்; விருந்து - புதுமை;
அவர் இரு வகையார், பண்டறிவுண்மையிற் குறித்து வந்தாரும், அஃதின்மையிற் குறியாது வந்தாரும் எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-25, 3:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே