கவனச்சிதறல்கள்

எதிரெதிரே தொடரிகள்
எதிரெதிரே அருகருகே
அவனும் அவளும்
காட்சி பிம்பமாயவள்
கண்ணீர் தெப்பமாயவன்

அவனின் நினைவலைகள்
அவளுள் வளர்ப்பிறைகள்
அவளின் உணர்விழைகள்
அவனிதயத்தை துளைத்தன
பல முறைகள்

பெண்ணின் வலிகள்
கண்ணீர் துளிகள்
ஆணின் மௌனம்
ஊமை மொழிகள்
உலவும் புலனம்

நகரும் தொடரிகள்
தளரும் முளரிகள்
தகருமா இடறுகள்

எழுதியவர் : வசீகரன்.க என்கிற சிவகுமார் (19-Sep-25, 3:24 pm)
பார்வை : 55

மேலே