தீபாவளி வந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு
தீபாவளி வந்தாச்சு...
பண்டிகையை முன்னிட்டு
பலவகையான இனிப்பு வகைகள்
மற்றும் பலகாரங்கள்
நம் முன்னே அணிவகுத்து
என்னை சுவைத்துப் பார்
என்று உங்களை உசுப்பி விடும்.
உஷார் மக்களே உஷார்
சுக்கு, ஓமம், மிளகு கலந்த
*தீபாவளி லேகியத்தை*
முதலில் சாப்பிடுங்கள்
பின்னர் *மாயா பஜார்* திரைப்படத்தில் வரும் எஸ் வி ரங்கராவ் போல் உண்ணாமல் அளவோடு
உண்டு மகிழுங்கள்.
உங்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துகள்...
-- கோவை சுபா

