என்னவனின் அந்த ஒரு நிமிடம்

உன் முகம் காணும் அந்த ஒரு நிமிடம்
உன் கண்களை பார்க்கும்
அந்த ஒரு நிமிடம்

உன் கை கோர்க்கும்
அந்த ஒரு நிமிடம்

உன் கால்கள் உரசும்
அந்த ஒரு நிமிடம்

தலைவனே நீ என் தாயாகி
அன்பு கொள்ளும்
அந்த ஒரு நிமிடம்

கனவனே
நீ என்னை தீண்டி இருவரும் ஒருவராகி இன்பம் அடையும்
அந்த ஒரு நிமிடம் காதலால் நான் சொர்க்கத்தில் மிதக்கிறேனடா!!!

எழுதியவர் : M. Chermalatha (5-Mar-25, 2:14 am)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 2

மேலே