அந்த குறுந்தொகைக் குறும்பில்
அணில் அந்த
சன்னல் கம்பிகளில்
ஏறி இறங்கி
வலிப்பு காட்டிவிட்டுப்
போகிறது.
அந்த "குறுந்தொகை"க்
குறும்பில்
காத்திருப்பின் நீண்ட
பாலை வனத்தைக்
காட்டிவிட்டுப்போகிறது
"அணிலாடு முன்றில்களில்".
காத்திருக்க நேரமில்லை என்று
க்ராஃபிக்ஸில் முறுவல்களா?
இன்று
உனக்கு காதல் செய்வதற்கும்
ஏ ஐ மங்கைகள் தான்
வந்து
கண்சிமிட்ட வேண்டுமா?
____________________________________________