தேடுகிறேன் - கவிதை

தேடுகிறேன் - கவிதை

பெருகி வரும் கண்ணீரில்
பேரன்பைத் தேடுகிறேன்

அலைபாயும் இதயத்தில்
அமைதியைத் தேடுகிறேன்

பரந்த இப்புவியில்
பாசத்தைத் தேடுகிறேன்

நலிந்த என் இதயத்தில்
நல்லோரைத் தேடுகிறேன்

விடிகின்ற பொழுதினிலே
வசந்தத்தை தேடுகிறேன்

வெம்மையான பாதையிலே
மென்மையினைத் தேடுகிறேன்

விட்டல் பூச்சியாயினும்
வாழ்வினைத் தேடுகிறேன்

பாரம் கொண்ட இதயத்தில்
பாசத்தைத் தேடுகிறேன்

இருள் சூழ்ந்த இப்புவியில்
சிற்றொளியைத் தேடுகிறேன்

முதிர்வுற்ற சிரிப்பினிலே
புன்னகையைத் தேடுகிறேன்

பொய்யென்றறிந்திருந்தும்
மெய்தேடி தவிக்கின்றேன்

புண்பட்ட இதயத்தில்
பூ வருடல் தேடுகிறேன்

எதிலும் ஏமாற்றத்தைக்
கண்டபின்பும் தேடுகிறேன்

என்றாவது ஒருநாள்
விடைகிடைக்குமா என் தேடலுக்கு

நிச்சயம் கிடைக்கும்
இறை தேடல் தன்னிலே என்றுணர்ந்தேன்.

அன்புடன்
ஸ்ரீ .விஜயலஷ்மி

எழுதியவர் : ஸ்ரீ .விஜயலஷ்மி (13-Oct-25, 6:36 pm)
பார்வை : 74

மேலே