ஆழ் குழி
ஆழ் குழி
நித்திரையை
நிம்மதி தேடுகிறது
இங்கு
வருவது கடினம்
வந்துவிட்டால் திரும்ப முடியாது
வழியனுப்பியர் வர வாய்ப்புண்டு
விரும்பி வருவது கடினம்
வசதி இருப்பின்
மேல் மக்கள்
சிபாரிசு தேவை
கணக்கு வழக்கை
சரி பார்க்க…..
தங்கும் இடம் இலவசம்
கவலை இனி எதற்கு !
பிரச்சனை இல்லா அமைதி
குளிர்கால தவம் ஏற்க…..
பறித்த ஆழ்குழி
வேண்டியதை செய்யும் !
அறிவித்தபடி
நிரந்திர ஓய்வு
இனிதே தொடர…….
வரவு நல்வரவாக இருக்க
ஒப்புதல் கையொப்பம்
தேவையில்லை இங்கே !
இளைப்பார ……